இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இன்று (23) வடக்கு - கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் மலையக அரசியல் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்புகள் கொழும்பில் இடம்பெற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், மாகாண சபைத் தேர்தல்களை இனியும் காலத்தை இழுத்தடிக்காமல் விரைந்து நடத்துமாறு இலங்கை அரசை வற்புறுத்தும்படி ஒரே குரலில் அவரிடம் வலியுறுத்தினர் எனத் தெரியவந்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன் மற்றும் ரெலோவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய எண்மரே இன்று இந்திய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்தனர்.
சந்திப்பில் பங்குபற்றிய எல்லோருமே கருத்துக்களை வெளியிட்டனர். பெரும்பாலும் அனைவரும் மாகாண சபைத் தேர்தலை இனியும் இழுத்தடிக்காமல் விரைந்து நடத்தும்படி வலியுறுத்தினர்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அரசின் நிலைப்பாடு, கருத்து வெளிப்பாடுகள், நாட்டில் உள்ள நிலைமை ஆகியவை குறித்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்களின் கருத்துக்களை இந்திய வெளிவிவகார அமைச்சர் உன்னிப்பாகச் செவிமடுத்தார்.
ஒற்றையாட்சியின் கீழ் இறுதித் தீர்வு சரிவராது என்பதை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தினார்.
அதுவே தங்களின் நிலைப்பாடு என்று தெரிவித்த சுமந்திரன், சமஷ்டி அடிப்படையிலான தீர்வு கட்டாயம், ஆனால் அந்த சமஷ்டி கட்டமைப்பு அதில் இருக்க வேண்டுமே தவிர, பெயரை நாங்கள் வற்புறுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மாகாண சபை முறைமை இனப் பிரச்சினைக்கான தீர்வு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஆயினும் இன்றைய நிலையில் மாகாண சபைத் தேர்தல் இழுத்தடிக்காமல் நடைபெற வேண்டும் என்பதைத் தமது கட்சியின் வலியுறுத்துவதாக இந்தச் சந்திப்பில் குறிப்பிட்டார்.
பேரிடர் மீட்பு நிவாரணப் பணிகள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் தமிழ்த் தலைவர்களிடம் வினாவினார்.
நாட்டில் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்ளூராட்சி சபைகளும் இருக்கின்ற அதே சமயம், அவற்றை புறமொதுக்கி, 'பிரஜாசக்தி' போன்ற வேறு கட்டமைப்புகள் மூலம் இந்த நிவாரணப் பணிகளை அரசியல்மயமாக்கி, அரசுத் தரப்பு அதில் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என்று தமிழ்க் கட்சித் தலைவர்கள் தெரிவித்த விடயங்களை மிக உன்னிப்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்வாங்கிக் கொண்டார், விவரங்களைக் கேட்டு அறிந்தார் என்று அறியவந்தது.
மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் ஜெய்சங்கரிடம் ஒரே குரலில் வலியுறுத்திய தமிழ்த் தலைவர்கள் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இன்று (23) வடக்கு - கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் மலையக அரசியல் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்த சந்திப்புகள் கொழும்பில் இடம்பெற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், மாகாண சபைத் தேர்தல்களை இனியும் காலத்தை இழுத்தடிக்காமல் விரைந்து நடத்துமாறு இலங்கை அரசை வற்புறுத்தும்படி ஒரே குரலில் அவரிடம் வலியுறுத்தினர் எனத் தெரியவந்துள்ளது.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன் மற்றும் ரெலோவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய எண்மரே இன்று இந்திய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்தனர்.சந்திப்பில் பங்குபற்றிய எல்லோருமே கருத்துக்களை வெளியிட்டனர். பெரும்பாலும் அனைவரும் மாகாண சபைத் தேர்தலை இனியும் இழுத்தடிக்காமல் விரைந்து நடத்தும்படி வலியுறுத்தினர்.மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அரசின் நிலைப்பாடு, கருத்து வெளிப்பாடுகள், நாட்டில் உள்ள நிலைமை ஆகியவை குறித்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்களின் கருத்துக்களை இந்திய வெளிவிவகார அமைச்சர் உன்னிப்பாகச் செவிமடுத்தார்.ஒற்றையாட்சியின் கீழ் இறுதித் தீர்வு சரிவராது என்பதை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தினார்.அதுவே தங்களின் நிலைப்பாடு என்று தெரிவித்த சுமந்திரன், சமஷ்டி அடிப்படையிலான தீர்வு கட்டாயம், ஆனால் அந்த சமஷ்டி கட்டமைப்பு அதில் இருக்க வேண்டுமே தவிர, பெயரை நாங்கள் வற்புறுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.மாகாண சபை முறைமை இனப் பிரச்சினைக்கான தீர்வு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஆயினும் இன்றைய நிலையில் மாகாண சபைத் தேர்தல் இழுத்தடிக்காமல் நடைபெற வேண்டும் என்பதைத் தமது கட்சியின் வலியுறுத்துவதாக இந்தச் சந்திப்பில் குறிப்பிட்டார்.பேரிடர் மீட்பு நிவாரணப் பணிகள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் தமிழ்த் தலைவர்களிடம் வினாவினார்.நாட்டில் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்ளூராட்சி சபைகளும் இருக்கின்ற அதே சமயம், அவற்றை புறமொதுக்கி, 'பிரஜாசக்தி' போன்ற வேறு கட்டமைப்புகள் மூலம் இந்த நிவாரணப் பணிகளை அரசியல்மயமாக்கி, அரசுத் தரப்பு அதில் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என்று தமிழ்க் கட்சித் தலைவர்கள் தெரிவித்த விடயங்களை மிக உன்னிப்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்வாங்கிக் கொண்டார், விவரங்களைக் கேட்டு அறிந்தார் என்று அறியவந்தது.