• Dec 01 2022

இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு கெஞ்சும் அமெரிக்கா-அதை நிரூபிப்பது போல் ஒரு விடயம்!

Tamil nila / 2 months ago
image

நேற்றைய ஆய்வில் அமெரிக்கா எப்படி இன்றைய காலகட்டத்தில் இந்தியாவைப் பார்த்து நடுங்குகிறது என்பதைப் பார்த்தோம், இன்று அதை ஆம் சரி தான் என நிரூபிப்பது போல் மற்றும் ஒரு விடயம் சர்வதேச அரங்கில் நடந்துள்ளது. அமெரிக்கா இந்தியாவிற்குப் பயப்பட மட்டுமா செய்கிறது? இனி அமெரிக்காவைக் காப்பாற்றப் போவதே இந்தியா தானே என இந்த சம்பவம் எடுத்துரைத்துள்ளது. இந்த சம்பவத்தை விரிவாகப் பார்க்கலாம். 

கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் antony blinken உம், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி உம் இருதரப்பு உரையாடல் ஒன்றிற்காக சந்தித்துள்ளனர்.

சரி எதற்காக இப்போது அமெரிக்கா சீனாவை சந்திக்க சென்றது? இதற்கு வழமையான ஒரு பகட்டு சாட்டை முன்வைத்திருக்கிறது அமெரிக்கா. "போட்டிகளை சரியான, நியாயமான ரீதியில் எதிர்கொள்வதற்காக இந்த சந்திப்பு அவசியமாகி இருக்கிறது" என அமெரிக்க வெளிவிவகார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. பாவம் அமெரிக்கா, யாரிடம் நேர்மையான போட்டிகளை எதிர்பார்ப்பது என்பதை முதலில் சிந்தித்திருக்க வேண்டும். 

சீனாவுடன் எல்லை முரண்பாடுகள் இருந்த சமயத்தில் கூட பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதற்கு ஆதரவு வழங்கிய இந்தியாவின் பெருந்தன்மை மற்றும் ஜனநாயக கண்ணியம் போல சீனாவிடம் இருந்து எதிர்பார்த்தது அமெரிக்காவின் தவறு என்றே கூற வேண்டும். இந்த தவறினால் சீனாவிடம் மூக்குடைந்து வந்ததே மிச்சம். 

சரி இந்த சந்திப்பில் என்ன நடந்தது? 90 நிமிடங்கள் நேரடியாக விடயங்களைக் கலந்துரையாடியுள்ளார்கள் இரண்டு நாடுகளின் அமைச்சர்களும். இது தொடர்பான அறிக்கைகள் இரண்டு நாட்டின் வெளிவிவகார அமைச்சு களாலும் வெளியிடப்பட்டுள்ளது.

இவற்றின் அடிப்படையில், சந்திப்பில் முக்கிய விடய பொருளாக தாய்வான் இருந்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, தாய்வானிற்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவது தொடர்பாக கடுமையாக தாக்கி இருந்தார்.

அவர் குறிப்பிடும்போது "தாய்வான் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சீனா எந்தவித நடவடிக்கையை மேற் கொண்டாலும் அது சீனாவின் தனிப்பட்ட உள்நாட்டு விஷயம். இதில் தலையிடுவதற்கு அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை" என கூறியுள்ளார். மேலும் அமெரிக்கா தொடர்ந்தும் தாய்வானிற்கு தவறான,  அபாயகரமான சமிக்ஞைகளை வழங்கி வருவதாகவும், இந்த நிலை தொடருமாக இருந்தால் இந்து பசுபிக் பிராந்தியத்தில் அமைதிக்கு சாத்தியமில்லை எனவும் நேருக்கு நேர் உறுதியாக கூறியுள்ளார்.

தாய்வானை ஆக்கிரமிக்க வேண்டாம் என்று சீனாவினை மிரட்டலாம் என எதிர்பார்த்து சென்ற அமெரிக்காவிற்கு இது முதல் கட்டத்தில் சற்றும் எதிர்பார்த்திராத நேரடி தாக்குதல் ஆக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எவ்வாறாயினும் நிலைமையை சமாளிக்க முயன்ற அமெரிக்க வெளிவிவகார அமைச்சர், "ஒரே சீனா எனும் கொள்கையில் இருந்து அமெரிக்கா எப்போதும் விலகவில்லை. ஆனால் சீனா- தாய்வான் பிரதேசத்தில் அமைதி நிறுவப்பட வேண்டும் என்பது நமக்கு அவசியம்" என கூறியுள்ளார். இந்தக் கருத்தை கணக்கிலும் எடுக்காத சீன வெளிவிவகார அமைச்சர்,  தாய்வானின் சுதந்திரம் எனும் கொள்கையை முற்றாக நாம் எதிர்க்க வேண்டும் என வெளிப்படையாக கூறி இருந்தார். அதாவது தாய்வான் சீனாவிற்கு உரியது எனும் கருத்தில்.

இவ்வளவு தூரம் நேரடியாக சீனா எதிர்ப்பதற்கும், சர்வதேச அரங்கில் அமெரிக்கா அவமானப்படுவதற்கும் அமெரிக்காவின் நிலையற்ற இரட்டை வேட தன்மைகளே காரணம் என கூற வேண்டும். உதாரணமாக இந்தியாவை எடுத்துக்கொண்டால்,  எந்த ஒரு வெளிவிவகார விடயத்திலும் இந்தியா எப்போதும் ஒரே கொள்கை, ஒரே பேச்சு, ஒரே செயல் எனும் போக்கை பேணி வருகிறது. ரஷ்யா விடயத்தில்,  ரஷ்யாவிற்கு இந்தியா ஆதரவு வழங்குவதாகவும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணை கொள்வனவு செய்வதாகவும், ஆயுத கொள்வனவுகளை நிறுத்த வேண்டும் எனவும் மீண்டும் மீண்டும் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்து வந்ததை நாம் அவதானித்து இருக்கிறோம். அண்மை காலங்களில் இந்த அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது.

இது ரஷ்யா-உக்ரைன் போர் ஆரம்பித்ததன் பின் ஆரம்பித்த விடயம் அல்ல. அதற்கு முன்னரே ரஷ்யாவிடம் இருந்து S-400 பாதுகாப்பு தொகுதிகளை இந்தியா கொள்வனவு செய்த சந்தர்ப்பத்தில் இருந்து அமெரிக்காவின் இந்த அழுத்தம் இந்தியா மீது இருந்து கொண்டே வந்துள்ளது. இந்தியா மீது பொருளாதார தடை விதித்து விடுவோம் என்று கூட மிரட்டல்களை அமெரிக்கா விடுத்தது.

அந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவிற்கு அமெரிக்கா கொடுத்த சிக்கல்கள் கொஞ்சமல்ல. ஆனால் இந்தியா எதற்கும் அசரவில்லை. "ரஷ்யாவுடனான நட்புறவு வேறு,  அமெரிக்கா உடனான நட்புறவு வேறு, ஐரோப்பிய நாடுகள் உடனான நட்புறவு வேறு. எந்த ஒரு தொடர்பையும் மற்றொரு நாட்டின் நட்புறவு பாதிக்கக்கூடாது. எமது நாட்டின் தேவைகள் என்ன என்பது நமக்குத் தெரியும். ஆயுத கொள்வனவு விடயத்தில் நட்பு நாடுகள் தலையிடத் தேவையில்லை" என ஆணித்தரமாக பதிலளித்தது. 

இந்த நிலையையே தற்போது ரஷ்யா உக்ரைன் போர் விவகாரத்திலும் இந்தியா பின்பற்றி வருகிறது. போரிற்கு ஒருபோதும் ஆதரவு தெரிவிப்பது இல்லை. ஆனால் இரண்டு தரப்பும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தைகள் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று மாத்திரமே மீண்டும் மீண்டும் கூறிவந்த இந்தியா, ஒருபோதும் ரஷ்யாவினால் போர் உருவாகியுள்ளது என்பதையோ ரஷ்யா இந்த போரை நிறுத்த வேண்டும் என்பதையோ கூறவில்லை. இரண்டு நாடுகளிற்கும் பொதுவான அறிவுரையை மாத்திரமே கூறிவருகிறது. தனது வெளிவிவகார கொள்கைகளில் நிலையாக உள்ளமையால் எந்த ஒரு தடுமாற்றமும் இன்றி சர்வதேச நாடுகளை நேருக்கு நேர் எதிர்த்து நின்று அடிக்கக் கூடிய பலம் இந்தியாவிற்கு காணப்படுகிறது. 

ஆனால் அமெரிக்காவின் நிலை அவ்வாறானது அல்ல. அமெரிக்கா ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பேச்சு என இரட்டை நாக்கு கொண்டு செயற்பட்டு வருகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக நேற்றைய ஆய்வில் பேசப்பட்ட பாகிஸ்தானிற்கு ஆயுதம் வழங்கிய விடயத்தைக் குறிப்பிட முடியும். இதேபோலதான் சீனாவின் விடயத்திலும் நடந்துகொள்கிறது அமெரிக்கா. ஆரம்பத்தில் ஒரே சீனா எனும் கொள்கையை ஆதரித்தது அமெரிக்காவே.

இப்போது தாய்வானிற்கு ஆதரவு வழங்கி வருகிறது. சீனா தாய்வானை ஆக்கிரமிக்கும் ஆக இருந்தால் தாய்வானுக்கு ஆதரவு வழங்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பகிரங்கமாகவே அறிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி தாய்வானிற்கு தூதர்களை அனுப்புவது, அமெரிக்க வீரர்கள் தாய்வான் வீரர்களுக்கு போர் பயிற்சி வழங்குவது மற்றும் ஆயுதங்களை வினியோகிப்பது என அனைத்து விதத்திலும் தாய்வானைத் தனி நாடாகவே கருதி உதவிகளை செய்து வருகிறது அமெரிக்கா. சீனாவின் அராஜகங்கள், அட்டூழியங்களுக்கு எதிராக தாய்வானிற்கு ஆதரவு வழங்க வேண்டியது உண்மையில் நியாயமான ஒரு விடயமே. ஆனால் ஒரே சீனா எனும் கொள்கையை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா இதனை செய்வதே தற்போது கேள்விக்கு உள்ளாகி உள்ளது. 

இதனை சீனா சுட்டிக்காட்டியபோது, திக்கி திணறி இப்போதும் அமெரிக்கா ஒரே சீனா எனும் கொள்கையை ஆதரிக்கிறது என அப்பட்டமான ஒரு பொய்யை முன்வைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. 
கபட நாடகங்கள், நரி வேலைகளுக்கு வழமையாக பெயர் போனது சீனா என இருக்கும்போது அப்படிப்பட்ட சீனாவிடம் அசிங்கப்பட்டு நிற்கும் நிலை அமெரிக்காவிற்கு தற்போது நேர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னரே அமெரிக்க அதிகாரிகளுக்கு அமெரிக்காவின் சர்வதேச நிலை நன்றாகப் புலன் ஆகியுள்ளது. இதன் காரணமாக வேறு வழியின்றி சீனாவை எதிர்க்க வேண்டுமாக இருந்தால் இந்தியாவிடம் அடைக்கலம் புகுவது தான் ஒரே வழி என்று சரணடைந்து விட்டனர். இந்த வாரம் அமெரிக்காவின் இந்து பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணை செயலாளர், ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்று முக்கியத்துவம் பெற்று பேசப்பட்டு வருகிறது. பிரதானமாக இதில் இந்தியாவிற்கும்-அமெரிக்காவிற்கும் இடைப்பட்ட உறவுகள் தொடர்பாக எலி ரட்னர் பல கருத்துக்களை தெளிவுபடுத்தியுள்ளார். அந்த வகையில் அவரது கருத்துக்களை வைத்துப் பார்க்கும் போது, அமெரிக்கா எப்படி இந்தியாவிடம் முழுமையாக சரணடைந்துள்ளது என்பது புலனாகிறது.

எலி ரட்னர் பின்வருமாறு கூறுகிறார், "சுதந்திரமான இந்து பசுபிக் பிராந்தியத்தை நிறுவுவதற்கும் கட்டமைப்பதற்கு இந்தியா- அமெரிக்கா இடையேயான நட்புறவே மைய புள்ளியாக அமெரிக்காவால் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா இந்தியாவிற்கு பல விடயங்களில் ஆதரவு தெரிவிப்பதற்கு முற்படுகிறது. முதலாவதாக இந்தியாவின் ஆயுத பலத்தை அதிகரிப்பதற்காக தற்போது இந்தியாவுடன் இணைந்து drone தயாரிப்பில் ஈடுபட முயற்சி செய்து வருகிறது.

அடுத்த கட்டமாக இந்து பசுபிக் பிராந்திய விடயங்களில் இந்தியாவுடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது என" கூறியுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைகள் எனும் போது இந்து பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரத்தை உறுதி செய்யும் விதமான பயிற்சிகள், ஒன்றிணைந்த கப்பல் படை செயல்பாடுகள் மற்றும் அடிப்படை கட்டுமான, பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றை இவர் குறிப்பிட்டிருக்கலாம் என்பது ஊகிக்கக் கூடிய விடயம்.

இந்த நேர்காணலின் கருத்துகளை சரியான விதத்தில் பொருள்கோடல் செய்து பார்த்தால், "இந்தியாவிற்கு நாங்கள் எந்த உதவி வேண்டுமானாலும் செய்கிறோம். சீனாவிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்" என்று அமெரிக்கா கெஞ்சுவது போன்ற தொனியை அவதானிக்க முடியும். சர்வதேச கொள்கைகளில் பிற நாடுகளின் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் துணிச்சலுடன் நேர்மையைப் பேணி வந்ததால் இன்று இந்தியாவிடம் பிற நாடுகள் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பிற செய்திகள்