• Nov 23 2024

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் திருவிழா..!

Sharmi / Sep 16th 2024, 11:48 am
image

வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலய தேர் உற்சவம் இன்று(16)காலை இடம்பெற்றுள்ளது

காலை 7 மணியிலிருந்து விசேட பூசைகள் இடம்பெற்று, அதனை தொடர்ந்து வசந்த மண்ட பூசை இடம் பெற்றது. 

அதனை தொடர்ந்து 9:30 மணியளவில் வல்லிபுரத்து ஆழ்வார் ஆஞ்சநேயர் முன்னே வர தொடர்ந்து விநாயகரும் அவரை தொடர்ந்து மகாலக்ஷ்மியும் தொடர்ந்து வர வல்லிபுரத்து சக்கரத்து ஆழ்வார் பெருந் தேரில் வலம் வந்தார்.

தேர்த் திருவிழாவை காண நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்.

பல அடியார்கள் தூக்கு காவடி, அங்க பிரதஸ்டை, பால்குடம் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றினர்.

இதேவேளை மக்களுக்கு உரிய சுகாதார மற்றும் அடிப்படை வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபை, பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளும் வழங்கியிருந்ததுடன், மக்களிற்கான பாதுகாப்பு மற்றும் ஒழுங்குகளை பருத்தித்துறை பொலிஸாரும் மேற்கொண்டிருந்தனர்.

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் திருவிழா. வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலய தேர் உற்சவம் இன்று(16)காலை இடம்பெற்றுள்ளதுகாலை 7 மணியிலிருந்து விசேட பூசைகள் இடம்பெற்று, அதனை தொடர்ந்து வசந்த மண்ட பூசை இடம் பெற்றது. அதனை தொடர்ந்து 9:30 மணியளவில் வல்லிபுரத்து ஆழ்வார் ஆஞ்சநேயர் முன்னே வர தொடர்ந்து விநாயகரும் அவரை தொடர்ந்து மகாலக்ஷ்மியும் தொடர்ந்து வர வல்லிபுரத்து சக்கரத்து ஆழ்வார் பெருந் தேரில் வலம் வந்தார்.தேர்த் திருவிழாவை காண நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்.பல அடியார்கள் தூக்கு காவடி, அங்க பிரதஸ்டை, பால்குடம் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றினர்.இதேவேளை மக்களுக்கு உரிய சுகாதார மற்றும் அடிப்படை வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபை, பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளும் வழங்கியிருந்ததுடன், மக்களிற்கான பாதுகாப்பு மற்றும் ஒழுங்குகளை பருத்தித்துறை பொலிஸாரும் மேற்கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement