• May 18 2024

நிலாவெளி கடலில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட வவுனியா சிறுவர்கள்! samugammedia

Chithra / Jul 18th 2023, 8:42 am
image

Advertisement

வவுனியாவில் இருந்து திருகோணமலைக்கு விஜயம் செய்ய வந்து நிலாவெளி கோபாலபுரம் பகுதியில் கடலுக்குச் சென்ற மூன்று சிறுமிகள் மற்றும் சிறுவன் ஒருவரும் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காப்பாற்றப்பட்டதாக பிரதி காவல்துறை மா அதிபர் ஜகத் பொன்சேகா தெரிவித்தார்.

வவுனியா நெலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 12, 10, 14 மற்றும் 9 வயதுடைய இந்த நான்கு சிறுவர்களும் கடல் அலையில் சிக்கி, நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நெலுக்குளம் பகுதியில் இருந்து தர்மலிங்கம் உதயகுமாரவுடன் வந்த இந்த நான்கு சிறுவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில் மீட்கப்பட்டதாக பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

நான்கு சிறுவர்களின் உயிர்கள் காவல்துறை உயிர்காப்புப் பிரிவைச் சேர்ந்த காவல்துறை சார்ஜன்ட்களான சந்திரசேன (40042), மிஸ்கின் (62730) மற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் சிந்தகா (69621) ஆகியோரால் காப்பாற்றப்பட்டனர்.

மூன்று காவல்துறை உத்தியோகத்தர்களும் கடற்கரையில் கடமையில் ஈடுபட்டிருந்த போது, ​​நான்கு சிறுவர்களும் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதைக் கண்டு, உடனடியாக கடலில் குதித்து உயிரைக் காப்பாற்றியதாக பிரதி காவல்துறை மா அதிபர் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.


நிலாவெளி கடலில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட வவுனியா சிறுவர்கள் samugammedia வவுனியாவில் இருந்து திருகோணமலைக்கு விஜயம் செய்ய வந்து நிலாவெளி கோபாலபுரம் பகுதியில் கடலுக்குச் சென்ற மூன்று சிறுமிகள் மற்றும் சிறுவன் ஒருவரும் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காப்பாற்றப்பட்டதாக பிரதி காவல்துறை மா அதிபர் ஜகத் பொன்சேகா தெரிவித்தார்.வவுனியா நெலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 12, 10, 14 மற்றும் 9 வயதுடைய இந்த நான்கு சிறுவர்களும் கடல் அலையில் சிக்கி, நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.வவுனியா நெலுக்குளம் பகுதியில் இருந்து தர்மலிங்கம் உதயகுமாரவுடன் வந்த இந்த நான்கு சிறுவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில் மீட்கப்பட்டதாக பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.நான்கு சிறுவர்களின் உயிர்கள் காவல்துறை உயிர்காப்புப் பிரிவைச் சேர்ந்த காவல்துறை சார்ஜன்ட்களான சந்திரசேன (40042), மிஸ்கின் (62730) மற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் சிந்தகா (69621) ஆகியோரால் காப்பாற்றப்பட்டனர்.மூன்று காவல்துறை உத்தியோகத்தர்களும் கடற்கரையில் கடமையில் ஈடுபட்டிருந்த போது, ​​நான்கு சிறுவர்களும் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதைக் கண்டு, உடனடியாக கடலில் குதித்து உயிரைக் காப்பாற்றியதாக பிரதி காவல்துறை மா அதிபர் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement