• May 18 2024

வவுனியா இரட்டை படுகொலை: பிரதான சந்தேக நபர் கைது! samugammedia

Chithra / Aug 3rd 2023, 11:25 am
image

Advertisement

வவுனியா தோணிக்கல்லில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவினை பெற்று நடத்திய விசாரணையின் பின்னர் கூமாங்குளத்தை சேர்ந்தவரும் சம்பவத்தில் மரணமடைந்த சுகந்தனின் நண்பராக இருந்து, பெண் விவகாரத்தால் பின்னர் பிரிந்தவருமான நண்பரே  இன்று (03)  கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும், மீண்டும் 11ஆம் திகதி ஆள் அடையாள அணி வகுப்பிற்காக 2ஆம் 3ஆம் 4ஆம் 5ஆம் சாட்சிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதியால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்போது, மன்றில் 4ஆம் சாட்சி தனது கருத்தினை தெரிவிக்க முற்பட்ட போது நீதிபதி 02.08.2023 உங்கள் கருத்தை தெரிவித்தால் உங்களுக்கு அனுகூலம் ஏற்படுத்த சந்தர்ப்பமாக அமையும் அதனால் 11ஆம் திகதி நீங்கள் விரும்பினால் யோசித்து உங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் அகமட் ரசீம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட வாள்கள் மற்றும் கோடரி, கத்தி, இரும்புகம்பி என்பன நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வவுனியா இரட்டை படுகொலை: பிரதான சந்தேக நபர் கைது samugammedia வவுனியா தோணிக்கல்லில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவினை பெற்று நடத்திய விசாரணையின் பின்னர் கூமாங்குளத்தை சேர்ந்தவரும் சம்பவத்தில் மரணமடைந்த சுகந்தனின் நண்பராக இருந்து, பெண் விவகாரத்தால் பின்னர் பிரிந்தவருமான நண்பரே  இன்று (03)  கைது செய்யப்பட்டுள்ளார்.அதன்படி 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும், மீண்டும் 11ஆம் திகதி ஆள் அடையாள அணி வகுப்பிற்காக 2ஆம் 3ஆம் 4ஆம் 5ஆம் சாட்சிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதியால் உத்தரவிடப்பட்டுள்ளது.இதன்போது, மன்றில் 4ஆம் சாட்சி தனது கருத்தினை தெரிவிக்க முற்பட்ட போது நீதிபதி 02.08.2023 உங்கள் கருத்தை தெரிவித்தால் உங்களுக்கு அனுகூலம் ஏற்படுத்த சந்தர்ப்பமாக அமையும் அதனால் 11ஆம் திகதி நீங்கள் விரும்பினால் யோசித்து உங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் அகமட் ரசீம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட வாள்கள் மற்றும் கோடரி, கத்தி, இரும்புகம்பி என்பன நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement