கொழும்பு தியகம விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வில் வவுனியா வீரர் சசிகுமார் டனுசன் 3000 மீற்றர் ஒட்டப்போட்டியில் போட்டியில் 10நிமிடம் 0 செக்கனில் ஓடி முடித்து தேசிய ரீதியில் 2ம் இடத்தினை பெற்றுள்ளார்.
முதலாம் மற்றும் மூன்றாவது இடத்தினை இரானுவ வீரர்கள் பெற்றிருந்தமையுடன் ஓர் தமிழ் விளையாட்டு வீரானாக தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்று சசிகுமார் டனுசன் வவுனியா மாவட்டத்திற்கு மாத்திரமின்றி வடமாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்
இவ் விளையாட்டு வீரர் வடமாகாணத்தில் கடந்த 2013ம் ஆண்டு 800 மீற்றர் ஒட்டப்போட்டியில் 1நிமிடம் 59.03 செக்கன் நேரத்தில் ஒடி முடித்த சாதனையினை 11 வருடங்களின் பின்னர் 06.07.2024 அன்று இடம்பெற்ற வட மாகாண மட்ட விளையாட்டு பெருவிழாவின் போது 800 மீற்றர் ஒட்டப்போட்டியில் 1நிமிடம் 59.03 செக்கன் நேரத்தில் ஓடி சமன் செய்துள்ளமையுடன் வடமாகாணத்தில் சிறந்த சுவட்டு வீரராக சம்பியனை வவுனியா மாவட்ட வீரரான சசிகுமார் டனுசன் தம்வசமாக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தேசிய கனிஸ்ட போட்டியில் இரண்டாமிடம் பெற்ற வவுனியா வீரர். கொழும்பு தியகம விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வில் வவுனியா வீரர் சசிகுமார் டனுசன் 3000 மீற்றர் ஒட்டப்போட்டியில் போட்டியில் 10நிமிடம் 0 செக்கனில் ஓடி முடித்து தேசிய ரீதியில் 2ம் இடத்தினை பெற்றுள்ளார்.முதலாம் மற்றும் மூன்றாவது இடத்தினை இரானுவ வீரர்கள் பெற்றிருந்தமையுடன் ஓர் தமிழ் விளையாட்டு வீரானாக தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்று சசிகுமார் டனுசன் வவுனியா மாவட்டத்திற்கு மாத்திரமின்றி வடமாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் இவ் விளையாட்டு வீரர் வடமாகாணத்தில் கடந்த 2013ம் ஆண்டு 800 மீற்றர் ஒட்டப்போட்டியில் 1நிமிடம் 59.03 செக்கன் நேரத்தில் ஒடி முடித்த சாதனையினை 11 வருடங்களின் பின்னர் 06.07.2024 அன்று இடம்பெற்ற வட மாகாண மட்ட விளையாட்டு பெருவிழாவின் போது 800 மீற்றர் ஒட்டப்போட்டியில் 1நிமிடம் 59.03 செக்கன் நேரத்தில் ஓடி சமன் செய்துள்ளமையுடன் வடமாகாணத்தில் சிறந்த சுவட்டு வீரராக சம்பியனை வவுனியா மாவட்ட வீரரான சசிகுமார் டனுசன் தம்வசமாக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.