• May 18 2024

நீதிமன்றில் முன்னிலையான வேலன் சுவாமிகள்..! நீதிமன்றம் உத்தரவு...!samugammedia

Sharmi / Aug 7th 2023, 4:49 pm
image

Advertisement

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த  வேலன் சுவாமிகள் மற்றும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆகியோர் சொந்தப் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த வேலன் சுவாமிகள்,

சிவில் சமூக சேவையாளர்கள் அரசியல் செயற்பாட்டாளர்கள் உட்பட பொதுமக்களுடைய பிரதிநிதிகளாக உண்மையை மக்களுக்கு எடுத்து சொல்லக்கூடியவர்கள் தான் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்ற முன்னிலையிலே இன்று ஆயர்ப்படுத்தப்பட்டார்கள்  

அந்தவகையிலே எங்களுடைய சார்பிலே இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்திலே பிரசன்னமாகியிருந்த அத்தனை சட்டத்தரணிகளும் எமக்காக முன்வந்து உண்மையை சரியான முறையிலே நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வழக்காடியமை ஒரு சிறப்பம்சமாக காணப்பட்டது என்றும்;

இந்த வழக்கிலிருந்து சொந்த சரீர பிணையில் நாங்கள் விடுவிக்கப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

சமயத்தலைவர்கள் அரசியல்தலைவர்கள் மற்றும் சமூகத்தலைவர்கள் என்ற அடிப்படையிலே சமூகத்தின் மத்தியிலே மக்களுக்காக பணியாற்றுபவர்கள் பொதுவாழ்விலே ஈடுபட்டுக் கொண்டுள்ளவர்கள் வேலைச்சுமைகளை கொண்டிருப்பவர்கள் என்ற வகையிலே நாங்கள் அனைவரும் பொது நிலைகளில் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையிலே நீதிமன்றம் அதனையும் கருத்திற்கொண்டு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.





நீதிமன்றில் முன்னிலையான வேலன் சுவாமிகள். நீதிமன்றம் உத்தரவு.samugammedia கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த  வேலன் சுவாமிகள் மற்றும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆகியோர் சொந்தப் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த வேலன் சுவாமிகள்,சிவில் சமூக சேவையாளர்கள் அரசியல் செயற்பாட்டாளர்கள் உட்பட பொதுமக்களுடைய பிரதிநிதிகளாக உண்மையை மக்களுக்கு எடுத்து சொல்லக்கூடியவர்கள் தான் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்ற முன்னிலையிலே இன்று ஆயர்ப்படுத்தப்பட்டார்கள்  அந்தவகையிலே எங்களுடைய சார்பிலே இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்திலே பிரசன்னமாகியிருந்த அத்தனை சட்டத்தரணிகளும் எமக்காக முன்வந்து உண்மையை சரியான முறையிலே நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வழக்காடியமை ஒரு சிறப்பம்சமாக காணப்பட்டது என்றும்; இந்த வழக்கிலிருந்து சொந்த சரீர பிணையில் நாங்கள் விடுவிக்கப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.சமயத்தலைவர்கள் அரசியல்தலைவர்கள் மற்றும் சமூகத்தலைவர்கள் என்ற அடிப்படையிலே சமூகத்தின் மத்தியிலே மக்களுக்காக பணியாற்றுபவர்கள் பொதுவாழ்விலே ஈடுபட்டுக் கொண்டுள்ளவர்கள் வேலைச்சுமைகளை கொண்டிருப்பவர்கள் என்ற வகையிலே நாங்கள் அனைவரும் பொது நிலைகளில் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையிலே நீதிமன்றம் அதனையும் கருத்திற்கொண்டு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement