• Nov 23 2024

கடந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு!

Tamil nila / Jun 6th 2024, 8:46 pm
image

கடந்த ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி நடைபெற இருந்த உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை முடித்து வைத்த உயர் நீதிமன்றம், அதன் தீர்ப்பு அறிவிப்வை ஒத்திவைத்தது.

இந்த மனு மீதான விசாரணை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் இன்று (06) நடைபெற்றது.

மனுக்கள் தொடர்பான வாய்மொழி பரிந்துரைகள் வழங்கல் இன்றுடன் நிறைவடைந்தது.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மற்றும் பெஃப்ரல் அமைப்பு ஆகியன இந்த மனுவை சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு கடந்த ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி நடைபெற இருந்த உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை முடித்து வைத்த உயர் நீதிமன்றம், அதன் தீர்ப்பு அறிவிப்வை ஒத்திவைத்தது.இந்த மனு மீதான விசாரணை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் இன்று (06) நடைபெற்றது.மனுக்கள் தொடர்பான வாய்மொழி பரிந்துரைகள் வழங்கல் இன்றுடன் நிறைவடைந்தது.ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மற்றும் பெஃப்ரல் அமைப்பு ஆகியன இந்த மனுவை சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement