பிக் பாஸ் 4 வது சீசனில் பலரும் எதிர்பார்த்தது போலவே நேர்மையாக விளையாடிய ஆரி பிக் பாஸ் டைட்டிலை வென்று விட்டார்.
இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளராக பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தொன்றை பகிர்ந்துள்ளார்.
தற்போது, சுரேஷ் சக்கரவர்த்தி அக்ரிமென்ட் குறித்து பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தி பல இளம் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விளையாடினார்.
இதனால் தாத்தா தாத்தா என சமூக வலைதளங்களில் பெரும் பிரபலமானார்.
அத்தோடு, தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
சமையல் கலைஞரான சுரேஷ் சக்கரவர்த்தி சக்ஸ் கிட்சன் என்ற சமையல் நிகழ்ச்சிக்கான யூட்யூப் சேனலையும் நடத்தி வருகிறார்.
பினாலே வாரத்தில் மற்ற ஹவுஸ்மேட்ஸ் வந்த போது கூட கடைசி நபராகதான் சுரேஷை ஹவுஸ்மேட்ஸ் பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தன்னை அழைக்காததை நினைத்து சமூக வலைதள பக்கத்தில் வருத்தப்பட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி.
இந்நிலையில் நேற்றைய ஃபினாலே நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தி, கமலுடன் 5 நாட்கள் ஸ்பெஷல் குக்காக பயணித்த அனுபவத்தை பகிர்ந்தார்.
இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள டிவிட் ஒன்று ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, சட்டம், ஒப்பந்தங்கள் ஆகியவை சில நேரங்களில் அல்லது பல நேரங்களில் நம்மை மிகவும் காயப்படுத்துகிறது.
ஆனால் ‘ஆண்டவர்’ போன்ற தூய்மையான ஆன்மாக்கள் இருப்பது நமக்கு நல்ல மருந்தாக உள்ளது.. நன்றி தலைவரே என்று கூறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் அக்ரிமென்ட்டை காட்டி விஜய் டிவி உங்களை மிரட்டியதா தாத்தா? என்று கேட்டு வருகின்றனர்.
இன்னும் சிலர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பார்ட்டிசிபேட் பண்ணுங்கள் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்:
- ஷெரீனை திட்டி தீர்க்கும் பாலா ரசிகர்கள் – காரணம் இதுதானாம் ..!
- பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பாலாஜி முருகதாஸ் போட்ட முதல் உருக்கமான பதிவு
- “ஆரி ஒரு அறுவைனு பாடினவங்க எல்லாம்”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு; செம வைரல்..!
- டைட்டில் வின்னரான ஆரி… இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் மீம்ஸ்
- பிக்பாஸ் கோப்பையை வென்று வந்தவுடன் முதலாவதாக ஆரி செய்த நெகிழ்ச்சி செயல்; கொண்டாடும் ரசிகர்கள
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்