• May 18 2024

விபத்தில் சிக்கிய விஜயகலா..!தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி...!samugammedia

Sharmi / Jun 29th 2023, 12:00 pm
image

Advertisement

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் இன்று(29) காலை முந்தலம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் சிக்கியதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்தின் பின்னர் அவர் ஹலவத்த பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், தற்போது ஹலவதா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் இணைப்பு

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் மங்கலவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.40 அளவில் இடம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகத்தின் கடமை நேர உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த நால்வரும் பயணித்த சிற்றூந்து வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகியமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த விபத்தில் காயமடைந்தவர்களில் விஜயகலா மகேஸ்வரன் தீவிரசிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் ஏனைய மூவரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

காயமடைந்தவர்களில் எவரும் கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய விஜயகலா.தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.samugammedia ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் இன்று(29) காலை முந்தலம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் சிக்கியதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.விபத்தின் பின்னர் அவர் ஹலவத்த பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், தற்போது ஹலவதா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.இரண்டாம் இணைப்புபுத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் மங்கலவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.40 அளவில் இடம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகத்தின் கடமை நேர உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.குறித்த நால்வரும் பயணித்த சிற்றூந்து வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகியமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.அதேவேளை குறித்த விபத்தில் காயமடைந்தவர்களில் விஜயகலா மகேஸ்வரன் தீவிரசிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் ஏனைய மூவரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.காயமடைந்தவர்களில் எவரும் கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement