• Feb 26 2025

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று..!

Sharmi / Feb 25th 2025, 9:05 am
image

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(25) நடைபெறவுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு, நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால்  கடந்த 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி, பிப்ரவரி 18 ஆம் திகதி முதல் பட்ஜெட்டின் இரண்டாவது வாசிப்பு நடைபெற்று வருகிறது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பைத் தொடர்ந்து, குழுநிலை விவாதம் பிப்ரவரி 27 முதல் மார்ச் 21 வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று. 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(25) நடைபெறவுள்ளது.வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு, நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால்  கடந்த 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.அதன்படி, பிப்ரவரி 18 ஆம் திகதி முதல் பட்ஜெட்டின் இரண்டாவது வாசிப்பு நடைபெற்று வருகிறது.வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பைத் தொடர்ந்து, குழுநிலை விவாதம் பிப்ரவரி 27 முதல் மார்ச் 21 வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement