• Feb 12 2025

போரின் நினைவுச் சின்னங்கள் மக்களை காயப்படுத்துவதாக இருந்தால் அகற்றப்படவேண்டும் - அ.வேழமாலிகிதன்

Tharmini / Feb 10th 2025, 3:06 pm
image

ஜெனீவா தீர்மானத்திற்கமைய போரின் நினைவுச்சின்னங்கள் தமிழ் மக்களின் மனங்களை காயப்படுத்துவதாக இருந்தால் அகற்றப்படவேண்டும் என்ற நிலையிலும் கிளிநொச்சி டிப்போ சந்தியில் இராணுவ போர் நினைவுச்சின்னம் காணப்படுகின்றது.

கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தெரிவிப்பு இன்று (10) கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

குறித்த வளாகத்தில் இலவச இணைய வசதியினை ஏற்படுத்தி அங்கு இளைஞர் யுவதிகள் மத்தியில் கலாசாரசீரழிவை நாங்கள் பார்க்க முடிகின்றது. முன்பு வங்கி ஒன்றிற்கு பின்பாக காமினி நிலையம் என்ற பெயரில் அங்கும் பண்பாட்டு சீரழிவு இடம்பெற்றது.

அது இப்பொழுது மூடப்பட்டுள்ளது. தமிழ்த்தேசிய இனத்தின் போர் வெற்றியை இன்னும் வலுப்படுத்தும் நோக்கில் அந்த வலயத்தில் எங்களுடைய பிள்ளைகளையே வழிபட வைக்கின்றது.

இராணுவம் இராணுவத்தின் வேலை தேசிய பாதுகாப்பை முன்னெடுப்பதாகவும் பிரதேச சபை மற்றும் மாகாண சபைகளின் கீழ் காணப்படுகின்ற பூங்காவை ,சிகையலங்கார நிலையம் உணவகங்களை நிர்வகிக்கின்றது . இராணுவம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது .

ஜனாதிபதி சொல்கின்றார். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றார்.இது இவ்வாறு இருக்க கடந்த சில தினங்ளுக்கு முன்பாக குறித்த வளாகத்தில் சிறுவர் பூங்காவை திறந்துள்ளது. கரைச்சி பிரதேச சபையின் நூலக காணி விடுவிக்கப்படவில்லை இளைய தலைமுறையினரை மலினப்படுத்தும் செயற்பாட்டை இராணுவம் உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.

போரின் நினைவுச் சின்னங்கள் மக்களை காயப்படுத்துவதாக இருந்தால் அகற்றப்படவேண்டும் - அ.வேழமாலிகிதன் ஜெனீவா தீர்மானத்திற்கமைய போரின் நினைவுச்சின்னங்கள் தமிழ் மக்களின் மனங்களை காயப்படுத்துவதாக இருந்தால் அகற்றப்படவேண்டும் என்ற நிலையிலும் கிளிநொச்சி டிப்போ சந்தியில் இராணுவ போர் நினைவுச்சின்னம் காணப்படுகின்றது. கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தெரிவிப்பு இன்று (10) கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.குறித்த வளாகத்தில் இலவச இணைய வசதியினை ஏற்படுத்தி அங்கு இளைஞர் யுவதிகள் மத்தியில் கலாசாரசீரழிவை நாங்கள் பார்க்க முடிகின்றது. முன்பு வங்கி ஒன்றிற்கு பின்பாக காமினி நிலையம் என்ற பெயரில் அங்கும் பண்பாட்டு சீரழிவு இடம்பெற்றது. அது இப்பொழுது மூடப்பட்டுள்ளது. தமிழ்த்தேசிய இனத்தின் போர் வெற்றியை இன்னும் வலுப்படுத்தும் நோக்கில் அந்த வலயத்தில் எங்களுடைய பிள்ளைகளையே வழிபட வைக்கின்றது. இராணுவம் இராணுவத்தின் வேலை தேசிய பாதுகாப்பை முன்னெடுப்பதாகவும் பிரதேச சபை மற்றும் மாகாண சபைகளின் கீழ் காணப்படுகின்ற பூங்காவை ,சிகையலங்கார நிலையம் உணவகங்களை நிர்வகிக்கின்றது . இராணுவம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது . ஜனாதிபதி சொல்கின்றார். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றார்.இது இவ்வாறு இருக்க கடந்த சில தினங்ளுக்கு முன்பாக குறித்த வளாகத்தில் சிறுவர் பூங்காவை திறந்துள்ளது. கரைச்சி பிரதேச சபையின் நூலக காணி விடுவிக்கப்படவில்லை இளைய தலைமுறையினரை மலினப்படுத்தும் செயற்பாட்டை இராணுவம் உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement