பிரான்ஸில் கடந்த சில தினங்களாக நூதனமான முறையில் பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில்; பிரான்ஸ் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரான்ஸின் அந்திர்-ஏ லுஆர் பகுதியில் மக்களின் வீடுகளின் வாசல்கள், தோட்டங்களுக்கு குறைந்த கட்டணத்தில் தார் செய்து தருவதாக கூறி மோசடி செய்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடியாளர்கள் தரம் குறைவான தார்களை பயன்படுத்தி வீதிகள் அமைப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு மோசடி செய்பவர்கள் ஐரிஷ் நிலக்கீல் பணியாளர்கள் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து வைத்திருப்பவதாகவும், அவர்கள் வீடு வீடாக சென்று சேவை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கவர்சிகரமான சலுகையில் தார் வீதிகளை அமைத்து கொடுப்பதாக உறுதிமொழி வழங்கிய பின்னர், பெரிய வீதியை அமைப்பதற்கான கட்டணத்தை இறுதியில் கோருவதாக பலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முதலில் ஒரு சதுர அடிக்கு 15 யூரோ வழங்குமாறு மோசடியாளர்கள் கோருவதாக தெரியவந்துள்ளது.
இது சாதாரண விலையை விடவும் பல மடங்கு குறைவு எனவும், எனினும் அருகில் அதனை விடவும் பல மடங்கு அதிகமாக வசூலிப்பதாக தெரியவந்துள்ளது.