• Jul 06 2024

பசுமாடு திருடுவோருக்கு எச்சரிக்கை..! அபராதத் தொகை ரூ.10 இலட்சம் samugammedia

Chithra / Oct 25th 2023, 1:02 pm
image

Advertisement

 

பசுமாடுகளை திருடுபவர்களுக்கான அதிகபட்ச அபராதத் தொகையான 50,000 ரூபாவை 10 இலட்சம் ரூபாவாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற திருட்டுகளுக்கு குறைந்தபட்சம் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான சரத்துக்களை உள்ளடக்கி விலங்குகள் நலச்சட்டத்தில் திருத்தம் செய்ய கால்நடை மேம்பாட்டு துறைக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கால்நடை பாதுகாப்பு சட்டத்தின் புதிய திருத்தங்கள் தொடர்பில் விவசாய அமைச்சில் நேற்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலில் மாடு திருட்டுகள் அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

கடந்த வாரம் அனுராதபுரம் மாவட்டத்தில் நாளொன்றுக்கு அதிகளவு பால் கொடுக்கும் பசுவும் திருடப்பட்டு கொல்லப்பட்டதாக குறிப்பிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர, பசு திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பசுமாடு திருடுவோருக்கு எச்சரிக்கை. அபராதத் தொகை ரூ.10 இலட்சம் samugammedia  பசுமாடுகளை திருடுபவர்களுக்கான அதிகபட்ச அபராதத் தொகையான 50,000 ரூபாவை 10 இலட்சம் ரூபாவாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.மேலும், இதுபோன்ற திருட்டுகளுக்கு குறைந்தபட்சம் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான சரத்துக்களை உள்ளடக்கி விலங்குகள் நலச்சட்டத்தில் திருத்தம் செய்ய கால்நடை மேம்பாட்டு துறைக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.கால்நடை பாதுகாப்பு சட்டத்தின் புதிய திருத்தங்கள் தொடர்பில் விவசாய அமைச்சில் நேற்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலில் மாடு திருட்டுகள் அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.கடந்த வாரம் அனுராதபுரம் மாவட்டத்தில் நாளொன்றுக்கு அதிகளவு பால் கொடுக்கும் பசுவும் திருடப்பட்டு கொல்லப்பட்டதாக குறிப்பிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர, பசு திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement