Tuesday, June 28, 2022

ஐரோப்பியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஐரோப்பாவில் தற்போது கோடைக்காலம் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய மக்களுக்கு ஐரோப்பிய நோய் எதிர்ப்பு மையம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கொரோனா மற்றும் இதர தொற்று நோய்களின் பரவல்கள் இன்னும் பூச்சிய நிலைக்கு வரவில்லை. மக்களின் பாதுகாப்பு குறைவடைந்து, நெருக்கங்கள் அதிகரிக்கும் போது தொற்று நோய்களும் தமது வீரியத்தை மேலும் அதிகரிக்கும்.

தற்போது ஐரோப்பாவில் கோடைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில்  மக்கள் வழமை போன்று தமது பயணங்களை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். இந்நிலையில் பயணங்களை மேற்கொள்ளும் அனைவரும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதுடன் முகக் கவசங்களை இயன்றவரை அணிந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

தொற்று நோய்கள் தொற்றுவதற்கு இடமளிக்க வேண்டாம். அனைத்து வகையான தடுப்பூசிகளும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே நோய் அதிகமாக பரவலடையும் இக்காலத்தில் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு ஐரோப்பிய தொற்று நோய் தடுப்புபிரிவு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை