• Nov 28 2024

வடக்கு, கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை...! வானிலையில் திடீர் மாற்றம்..! பாடசாலைகளுக்கு பூட்டு

Chithra / Jan 8th 2024, 8:30 am
image


வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்தமிழகம், வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இதனிடையே, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. 

குறிப்பாக, அரியலூர், வேலூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை மஹியங்கனை - கிரந்துருகோட்டே பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் ஒருவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

கிரந்துருகோட்டே - ஹோபரிய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் மழை காரணமாக உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கை 

விடுக்கப்பட்டிருந்த நிலையில் உல்ஹிட்டிய ஓயாவின் பாலத்தின் ஊடாக குறித்த நபர் முச்சக்கரவண்டியை செலுத்தியுள்ளார்.

அதன்போது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முச்சக்கர வண்டியுடன் அதன் சாரதியும் இழுத்துச் செல்லப்பட்டார்.

இந்தநிலையில், பாலத்தில் இருந்து 4 கிலோமீற்றர் தொலைவில் ஆற்றில் சிக்கியிருந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டிருந்தது.

மேலும் வெள்ளத்தினால் பாரியளவில் சேதமடைந்த முச்சக்கரவண்டி பாலத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலிருந்து மீட்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கிராந்துருகோட்டே காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதனிடையே நாடளாவிய ரீதியில் தொடர்ந்து பெய்து வரும் மழைக்காரணமாக பலாங்கொடை பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

அத்துடன், குறித்த பகுதியில் உள்ள மூன்று குடும்பங்களை சேர்ந்த 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை. வானிலையில் திடீர் மாற்றம். பாடசாலைகளுக்கு பூட்டு வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.இதேவேளை தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்தமிழகம், வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.இதனிடையே, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அரியலூர், வேலூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில், கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மஹியங்கனை - கிரந்துருகோட்டே பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் ஒருவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.கிரந்துருகோட்டே - ஹோபரிய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடும் மழை காரணமாக உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் உல்ஹிட்டிய ஓயாவின் பாலத்தின் ஊடாக குறித்த நபர் முச்சக்கரவண்டியை செலுத்தியுள்ளார்.அதன்போது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முச்சக்கர வண்டியுடன் அதன் சாரதியும் இழுத்துச் செல்லப்பட்டார்.இந்தநிலையில், பாலத்தில் இருந்து 4 கிலோமீற்றர் தொலைவில் ஆற்றில் சிக்கியிருந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டிருந்தது.மேலும் வெள்ளத்தினால் பாரியளவில் சேதமடைந்த முச்சக்கரவண்டி பாலத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலிருந்து மீட்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கிராந்துருகோட்டே காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இதனிடையே நாடளாவிய ரீதியில் தொடர்ந்து பெய்து வரும் மழைக்காரணமாக பலாங்கொடை பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.அத்துடன், குறித்த பகுதியில் உள்ள மூன்று குடும்பங்களை சேர்ந்த 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தநிலையில், பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement