• Dec 18 2025

கொழும்பில் நீர் விநியோகம் முற்றிலும் தடைப்படலாம்- மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

Chithra / Nov 29th 2025, 12:55 pm
image



கொழும்பு நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய மையமான அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம் கடுமையான அபாயத்தை எதிர்கொண்டு வருவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்ட அவசர எச்சரிக்கையில், களனி கங்கையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றதால், அம்பத்தலே நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.


தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் தலைவர் வெளியிட்ட அறிவிப்பில்,


களனி கங்கையின் நீர் மட்டம் மேலும் 7 அடி உயர்ந்தால், சுத்திகரிப்பு நிலையத்தை இயங்கச் செய்ய சிக்கல் ஏற்படும். இதன் விளைவாக கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு நீர் விநியோகத்தில் தடை ஏற்படும் வாய்ப்பு அதிகம், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


நிலைமையை கட்டுப்படுத்த அனைத்து அவசர நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், தொழில்நுட்ப குழுக்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும், மோசமான வானிலை தொடரும் சூழலில் மேல் மாகாண மக்களுக்கு நீர் பயன்பாட்டில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும், அதிகாரிகள் வெளியிடும் அறிவுரைகளை கவனிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பில் நீர் விநியோகம் முற்றிலும் தடைப்படலாம்- மக்களுக்கு முக்கிய அறிவிப்பு. கொழும்பு நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய மையமான அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம் கடுமையான அபாயத்தை எதிர்கொண்டு வருவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்ட அவசர எச்சரிக்கையில், களனி கங்கையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றதால், அம்பத்தலே நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் தலைவர் வெளியிட்ட அறிவிப்பில்,களனி கங்கையின் நீர் மட்டம் மேலும் 7 அடி உயர்ந்தால், சுத்திகரிப்பு நிலையத்தை இயங்கச் செய்ய சிக்கல் ஏற்படும். இதன் விளைவாக கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு நீர் விநியோகத்தில் தடை ஏற்படும் வாய்ப்பு அதிகம், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.நிலைமையை கட்டுப்படுத்த அனைத்து அவசர நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், தொழில்நுட்ப குழுக்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், மோசமான வானிலை தொடரும் சூழலில் மேல் மாகாண மக்களுக்கு நீர் பயன்பாட்டில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும், அதிகாரிகள் வெளியிடும் அறிவுரைகளை கவனிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement