ஈ.பி.டி.பியை விமர்சிக்காது எந்தவொரு கட்சிக்கும் வயிற்றுப்பிழைப்பு இல்லை என்ற நிலையே இருந்து வரும் ஒரு அரசியல் சூழல் இருந்து வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரின் வேட்பாளர் அமிர்தலிங்கம் தவதீசன் தெரிவித்துள்ளார்.
ஈ.பி.டி.பியின் வேட்பாளர்களான தேவதாசன் கமலதாசன் மற்றும் அமிர்தலிங்கம் தவதீசன், ஆகியோர் யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில் -
வலுவான கட்சி கட்டமைப்பும் தலைமையின் சிறப்பான வழிநடத்தலும் எமது கட்சியிடம் இருக்கின்றது.
"பிக்மி" நிறுவனத்தின் ஓர் ஊழியராக நான் இருக்கின்றேனே தவிர அது ஈ.பி.டி.பியின் நிறுவனம் அல்ல.
அதேபோன்று ஈ.பி.டி.பியை விமர்சிக்காது எந்தவொரு கட்சிக்கும் வயிற்றுப்பிழைப்பு இல்லை என்ற நிலையே இருந்து வரும் ஒரு அரசியல் சூழல் இருந்து வருகின்றது.
இந்த நிலையை மக்கள் உணர்ந்து மக்களின் நலன்களை முன்கொண்டு செல்லும் எமது கட்சிக்கு ஆதரவு பலத்தை வழங்குங்கள் என்றும் அழைப்பு விடுத்தார்.
அதேநேரம் கடந்த காலங்களில் யாழ் மாநகரில் பல்வேறு மக்கள் நலன் சார் திட்டங்களை செய்த நாம் அவ்வாறான பயணத்தில் தொடர்ந்தும் பயணிக்க இம்முறையும் சந்தர்ப்பத்தை மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என ஈ.பி.டி.பியின் வேட்பாளரான தேவதாசன் கமலதாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் கிடைக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் மக்களுக்காகவும் மக்களின் தேவைகளை ஈடுசெய்யும் வகையிலும் மேற்கொண்டு அரச தொழில் வாய்ப்புகள் முதல், சிறு கடை வியாபாரங்கள் வரையும் பெற்றுக்கொடுத்து ஏழைகளையும் வாழ்வியலில் ஒளிபெறச் செய்தது கொடுத்தது எமது கட்சியின் வாழ்நாள் சாதனையாக இருக்கின்றது.
அந்தவகையில் இம்முறை நடைபெறும் தேர்தலிலும் எமது கட்சியின் வெற்றியை உறுதி செய்து மக்கள் தமது வாழ்வியலை வெற்றிகொள்வார்கள் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ் மாநகரை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியவர்கள் நாம் - ஈ.பி.டி.பியின் மாநகர் வேட்பாளர்கள் சுட்டிக்காட்டு ஈ.பி.டி.பியை விமர்சிக்காது எந்தவொரு கட்சிக்கும் வயிற்றுப்பிழைப்பு இல்லை என்ற நிலையே இருந்து வரும் ஒரு அரசியல் சூழல் இருந்து வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரின் வேட்பாளர் அமிர்தலிங்கம் தவதீசன் தெரிவித்துள்ளார்.ஈ.பி.டி.பியின் வேட்பாளர்களான தேவதாசன் கமலதாசன் மற்றும் அமிர்தலிங்கம் தவதீசன், ஆகியோர் யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தனர்.இதன்போது இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில் - வலுவான கட்சி கட்டமைப்பும் தலைமையின் சிறப்பான வழிநடத்தலும் எமது கட்சியிடம் இருக்கின்றது."பிக்மி" நிறுவனத்தின் ஓர் ஊழியராக நான் இருக்கின்றேனே தவிர அது ஈ.பி.டி.பியின் நிறுவனம் அல்ல.அதேபோன்று ஈ.பி.டி.பியை விமர்சிக்காது எந்தவொரு கட்சிக்கும் வயிற்றுப்பிழைப்பு இல்லை என்ற நிலையே இருந்து வரும் ஒரு அரசியல் சூழல் இருந்து வருகின்றது.இந்த நிலையை மக்கள் உணர்ந்து மக்களின் நலன்களை முன்கொண்டு செல்லும் எமது கட்சிக்கு ஆதரவு பலத்தை வழங்குங்கள் என்றும் அழைப்பு விடுத்தார்.அதேநேரம் கடந்த காலங்களில் யாழ் மாநகரில் பல்வேறு மக்கள் நலன் சார் திட்டங்களை செய்த நாம் அவ்வாறான பயணத்தில் தொடர்ந்தும் பயணிக்க இம்முறையும் சந்தர்ப்பத்தை மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என ஈ.பி.டி.பியின் வேட்பாளரான தேவதாசன் கமலதாசன் தெரிவித்துள்ளார்.மேலும் கிடைக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் மக்களுக்காகவும் மக்களின் தேவைகளை ஈடுசெய்யும் வகையிலும் மேற்கொண்டு அரச தொழில் வாய்ப்புகள் முதல், சிறு கடை வியாபாரங்கள் வரையும் பெற்றுக்கொடுத்து ஏழைகளையும் வாழ்வியலில் ஒளிபெறச் செய்தது கொடுத்தது எமது கட்சியின் வாழ்நாள் சாதனையாக இருக்கின்றது.அந்தவகையில் இம்முறை நடைபெறும் தேர்தலிலும் எமது கட்சியின் வெற்றியை உறுதி செய்து மக்கள் தமது வாழ்வியலை வெற்றிகொள்வார்கள் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.