• Jan 16 2025

இரு நாட்டு மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்போம்! - அநுர அரசு உறுதி

Chithra / Jan 14th 2025, 8:16 am
image


இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்போம் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த அரசு போல் இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகளை  வைத்து அரசியல் ஆதாயம் தேட எமது அரசு முயலாது. 

இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காண்போம்.

மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய அரசுடன் ஏற்கனவே பேசிவிட்டோம். தொடர்ந்தும் பேசுவோம்.

இரு நாட்டு மீனவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வு காண்போம்." - என்றார்.

இரு நாட்டு மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்போம் - அநுர அரசு உறுதி இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்போம் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த அரசு போல் இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகளை  வைத்து அரசியல் ஆதாயம் தேட எமது அரசு முயலாது. இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காண்போம்.மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய அரசுடன் ஏற்கனவே பேசிவிட்டோம். தொடர்ந்தும் பேசுவோம்.இரு நாட்டு மீனவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வு காண்போம்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement