• Jan 20 2025

இராணுவ முகாமில் இருந்து காணாமல் போன ஆயுதங்கள்! ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

Chithra / Jan 20th 2025, 8:01 am
image

 

இலங்கை இராணுவ முகாமில் இருந்து காணாமல் போயிருந்த 73 T56 ரக துப்பாக்கிகள் பாதாள உலகக் குழுக்களிடம் சிக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

மேலும், இச்செய்தி தேசிய பாதுகாப்புக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், காணாமல் போன ஆயுதங்களில் 38 ஆயுதங்களை அதிகாரிகள் வெற்றிகரமாக மீட்டுள்ளதுடன் மீதமுள்ளவை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என 13 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

தேசிய பாதுகாப்பு கருதி மீதமுள்ள ஆயுதங்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இராணுவ முகாமில் இருந்து காணாமல் போன ஆயுதங்கள் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்  இலங்கை இராணுவ முகாமில் இருந்து காணாமல் போயிருந்த 73 T56 ரக துப்பாக்கிகள் பாதாள உலகக் குழுக்களிடம் சிக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், இச்செய்தி தேசிய பாதுகாப்புக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், காணாமல் போன ஆயுதங்களில் 38 ஆயுதங்களை அதிகாரிகள் வெற்றிகரமாக மீட்டுள்ளதுடன் மீதமுள்ளவை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என 13 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு கருதி மீதமுள்ள ஆயுதங்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement