• May 18 2024

கனடா தமிழ்க் கடையில் மாம்பழம் வாங்கிய ஈழத்தமிழருக்கு நேர்ந்த கதி..! samugammedia

Chithra / Jun 25th 2023, 6:53 am
image

Advertisement

கனடா ஸ்காபுரோவிலுள்ள தமிழ் கடை ஒன்றில் மாம்பழங்களை வாங்கிய ஈழத்தமிழர் ஒருவர் தான் ஏமாற்றப்பட்ட விதத்தையும் அதனால் ஏற்பட்ட வலியையும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவரது முகநூலில், 14 டொலருக்கு 9 மாம்பழங்களை வாங்கிய நிலையில் மாம்பழங்கள் அனைத்தும் பழுதடைந்திருந்தது. அதனை கொண்டு உரிய கடைக்கு சென்றேன். முதலாளியினை நட்புடன் அணுகி ஓரமாக கூட்டிச்சென்று பழுதடைந்த பழங்களைக்காட்டி அண்ணா இதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் என கூறி காண்பித்தேன்.

அதற்கு நீங்களும் இதை பார்த்து அல்லவா எடுத்திருக்க வேண்டும் என கூறியபோது, அது உண்மைதான். நீங்களும் இதை பார்த்து அல்லவா விற்கவேண்டும் என்றேன். அதற்கு சற்று தடுமாற்றத்துடன் ம்ம்ம். வேறொன்றை எடுத்து செல்லுங்கள் அல்லது பணத்தைப் பெற்றுச் செல்லுங்கள் என்று கூறியவாறே உதாசீனமாக உள்ளே சென்றுவிட்டார்.


முன் கடை விற்பனையில் பெண்மணி ஒருவர் விறுவிறுப்பாக ஈடுபட்டுக்கொண்டு நின்றார். தரையில் கொட்டுண்டு புரண்டு ஓடிய சில மங்குஸ்தான் பழங்களையும் கூச்சமின்றி மக்கள் பார்க்கிறார்களே என்ற சலனம் ஏதுமின்றி எடுத்து பெட்டியில் அடுக்கி வைத்தார்.

அந்த இடம் ஒரு நடைபாதை. அவரை அணுகி பழுதடைந்த மாம்பழப் பெட்டியை மாற்ற கேட்டபோது. அந்த பெண்மணி பாராமுகமாக போனில் கதைத்துக்கொண்டும் மற்றய கஸ்ட்மர்க்ளுக்கு விற்பனை செய்வதிலுமே கவனமாக இருந்தார்.

போன் கதைக்கிறேன் தெரியவில்லையா? என்றார். அவரது குரல் உயர்வும் பாரா முக்கமும் அந்த மாம்பழங்களை திரும்பவும் நாம் கொண்டுசென்று காட்டியது அவர்கள் ஒருவருக்குமே பிடிக்கவில்லை என்பது எனக்கு புரிந்தது. நானாகவே சென்று ஒன்றை மாற்றுவதற்க்காக உள்ளே சென்று அதே இன மாம்பழ பெட்டிகளை பார்த்தபோது.


அனைத்துமே உண்பதற்கு தரமற்றவையாக இருந்தது. மீண்டும் அந்த பெண்ணிடம் அதை குறிப்பிட்டு கூறியபோது. அவர் சினத்துடன் கூறினார். அவற்றை எல்லாம் எறியவா சொல்கிறீர்கள் என்று. இதன் அர்த்தம் என்ன? இதுதான் நமது வியாப்பாரம் என்றாரா? எனக்கு புரியவில்லை.

அப்போதுதான் உணர்ந்தேன். தமிழர்களது கடைகளை விட சீனாகாரர்களின் கடை துப்பரவிலும் தூய்மையிலும் நேர்மையிலும் விலையிலும் பரவாயில்லை என்று மக்கள் கதைப்பது உண்மைதானே என்பது உறுத்தியது.

14 டொலர் பெறுமதியான 9 மாம்பழத்துக்கு இந்த பக்கம் ஏன் வந்தேன் என்று நினைத்தேன். தமிழன் என்ற உணர்வு. தமிழ் தேசியம் என்ற உணர்வு. இதெல்லாம் இனிவரும் காலங்களில் உணர்வு அல்ல எமது பலவீனம் என்பதை உணர்ந்தேன்.

உங்களிடம் நியாய விலை இல்லாது போலானாலும் நீங்கள் கேட்கும் பணத்தை கொடுத்து உங்களை நாடிவரும் மக்களுக்கு தரமான உணவுப்பொருட்களை விற்பனை செய்ய முயர்ச்சி செய்யுங்கள். அதேபோல பொருட்களை வாங்கவரும் மக்களும் அதன் தரத்தை உறுதிசெய்துவிட்டு எடுத்து செல்லுங்கள் எனவும் பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர்கள் சிலரினால் நடத்தப்படும் சில தமிழ் கடைகளில் பழுதடைந்த நிலையிலுள்ள பொருட்களை விற்பனை செய்யும் மோசடிகள் இடம்பெறுவதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.        

கனடா தமிழ்க் கடையில் மாம்பழம் வாங்கிய ஈழத்தமிழருக்கு நேர்ந்த கதி. samugammedia கனடா ஸ்காபுரோவிலுள்ள தமிழ் கடை ஒன்றில் மாம்பழங்களை வாங்கிய ஈழத்தமிழர் ஒருவர் தான் ஏமாற்றப்பட்ட விதத்தையும் அதனால் ஏற்பட்ட வலியையும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அவரது முகநூலில், 14 டொலருக்கு 9 மாம்பழங்களை வாங்கிய நிலையில் மாம்பழங்கள் அனைத்தும் பழுதடைந்திருந்தது. அதனை கொண்டு உரிய கடைக்கு சென்றேன். முதலாளியினை நட்புடன் அணுகி ஓரமாக கூட்டிச்சென்று பழுதடைந்த பழங்களைக்காட்டி அண்ணா இதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் என கூறி காண்பித்தேன்.அதற்கு நீங்களும் இதை பார்த்து அல்லவா எடுத்திருக்க வேண்டும் என கூறியபோது, அது உண்மைதான். நீங்களும் இதை பார்த்து அல்லவா விற்கவேண்டும் என்றேன். அதற்கு சற்று தடுமாற்றத்துடன் ம்ம்ம். வேறொன்றை எடுத்து செல்லுங்கள் அல்லது பணத்தைப் பெற்றுச் செல்லுங்கள் என்று கூறியவாறே உதாசீனமாக உள்ளே சென்றுவிட்டார்.முன் கடை விற்பனையில் பெண்மணி ஒருவர் விறுவிறுப்பாக ஈடுபட்டுக்கொண்டு நின்றார். தரையில் கொட்டுண்டு புரண்டு ஓடிய சில மங்குஸ்தான் பழங்களையும் கூச்சமின்றி மக்கள் பார்க்கிறார்களே என்ற சலனம் ஏதுமின்றி எடுத்து பெட்டியில் அடுக்கி வைத்தார்.அந்த இடம் ஒரு நடைபாதை. அவரை அணுகி பழுதடைந்த மாம்பழப் பெட்டியை மாற்ற கேட்டபோது. அந்த பெண்மணி பாராமுகமாக போனில் கதைத்துக்கொண்டும் மற்றய கஸ்ட்மர்க்ளுக்கு விற்பனை செய்வதிலுமே கவனமாக இருந்தார்.போன் கதைக்கிறேன் தெரியவில்லையா என்றார். அவரது குரல் உயர்வும் பாரா முக்கமும் அந்த மாம்பழங்களை திரும்பவும் நாம் கொண்டுசென்று காட்டியது அவர்கள் ஒருவருக்குமே பிடிக்கவில்லை என்பது எனக்கு புரிந்தது. நானாகவே சென்று ஒன்றை மாற்றுவதற்க்காக உள்ளே சென்று அதே இன மாம்பழ பெட்டிகளை பார்த்தபோது.அனைத்துமே உண்பதற்கு தரமற்றவையாக இருந்தது. மீண்டும் அந்த பெண்ணிடம் அதை குறிப்பிட்டு கூறியபோது. அவர் சினத்துடன் கூறினார். அவற்றை எல்லாம் எறியவா சொல்கிறீர்கள் என்று. இதன் அர்த்தம் என்ன இதுதான் நமது வியாப்பாரம் என்றாரா எனக்கு புரியவில்லை.அப்போதுதான் உணர்ந்தேன். தமிழர்களது கடைகளை விட சீனாகாரர்களின் கடை துப்பரவிலும் தூய்மையிலும் நேர்மையிலும் விலையிலும் பரவாயில்லை என்று மக்கள் கதைப்பது உண்மைதானே என்பது உறுத்தியது.14 டொலர் பெறுமதியான 9 மாம்பழத்துக்கு இந்த பக்கம் ஏன் வந்தேன் என்று நினைத்தேன். தமிழன் என்ற உணர்வு. தமிழ் தேசியம் என்ற உணர்வு. இதெல்லாம் இனிவரும் காலங்களில் உணர்வு அல்ல எமது பலவீனம் என்பதை உணர்ந்தேன்.உங்களிடம் நியாய விலை இல்லாது போலானாலும் நீங்கள் கேட்கும் பணத்தை கொடுத்து உங்களை நாடிவரும் மக்களுக்கு தரமான உணவுப்பொருட்களை விற்பனை செய்ய முயர்ச்சி செய்யுங்கள். அதேபோல பொருட்களை வாங்கவரும் மக்களும் அதன் தரத்தை உறுதிசெய்துவிட்டு எடுத்து செல்லுங்கள் எனவும் பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார்.அதேசமயம் புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர்கள் சிலரினால் நடத்தப்படும் சில தமிழ் கடைகளில் பழுதடைந்த நிலையிலுள்ள பொருட்களை விற்பனை செய்யும் மோசடிகள் இடம்பெறுவதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.        

Advertisement

Advertisement

Advertisement