• Mar 07 2025

மனித பாவனைக்கு தகுதியற்ற கோதுமை மா மீட்பு!

Chithra / Mar 6th 2025, 8:10 am
image

 

வத்தளை, உஸ்வதகேயாவ பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் இருந்து, சந்தையில் வெளியிடுவதற்கு தயாராக இருந்த மனித பாவனைக்கு தகுதியற்ற கோதுமை மாவின் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கோதுமை மா இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த தகவலின் பிரகாரம் வத்தளை உஸ்வதகேயாவ களஞ்சியலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 750 தொன் கோதுமை மாவு கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மனித பாவனைக்கு தகுதியற்ற கோதுமை மா மீட்பு  வத்தளை, உஸ்வதகேயாவ பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் இருந்து, சந்தையில் வெளியிடுவதற்கு தயாராக இருந்த மனித பாவனைக்கு தகுதியற்ற கோதுமை மாவின் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கோதுமை மா இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.இந்த தகவலின் பிரகாரம் வத்தளை உஸ்வதகேயாவ களஞ்சியலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 750 தொன் கோதுமை மாவு கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement