பாராளுமன்ற உறுப்புரிமையில் இருந்து தான் இராஜினாமா செய்ய போவதில்லை என அபே ஜனபல கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் கூறியுள்ளார்.

அத்துரலியே ரத்தன தேரர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக போவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியை அடுத்தே, அவர் இந்த பதிலை தெரிவித்துள்ளார்.

மேலும் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தயாராகியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முழுமையாக உண்மைக்கு புறம்பானது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக, தான் எந்தவொரு தரப்புடனும், எந்தவொரு இணக்கப்பாட்டையும் எட்டவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான், பாராளுமன்ற பதவியை, தனது பதவி காலம் முழுவதும் தொடர எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

அத்தோடு அபே ஜனபல கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தனக்கு கிடைக்க வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்றைய தினம் காணொளியொன்றின் ஊடாக அறிவித்திருந்தார்.

மேலும் ஜுன் மாதம் 5ம் திகதியுடன், அத்துரலியே ரத்தன தேரருடைய பாராளுமன்ற பதவி காலம் நிறைவு பெற வேண்டுமெனவும், அதன் பின்னர் அந்த உறுப்புரிமை தனக்கு கிடைக்க வேண்டும் எனவும் தமக்குள் ஏற்கனவே இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் கூறுகின்றார்.

மேலும் தன்னுடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டிற்கு அமைய, அத்துரலியே ரத்தன தேரர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவி விலக போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரெலியே ரத்தன தேரர் குறிப்பிடுகின்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: