• Nov 19 2024

ஒருமாத காலத்துக்கு பிற்போடப்படுமா உயர்தரப் பரீட்சை? அரசிடம் முன்னாள் எம்.பி. கோரிக்கை

Chithra / Nov 12th 2024, 7:35 am
image

 

கல்வி பொதுதாராதர உயர்தர பாடத்திட்டம் நிறைவு பெறாத காரணத்தால் உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு பிற்போடுமாறு முன்னாள் பாராளுமன்ற உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் உள்ள சர்வஜன சக்தி கட்சியின் காரியாலயத்தில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

கொவிட் பெருந்தொற்று மற்றும் பொருளாதார தாக்கம் ஆகிய காரணிகளால் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு தேசிய பரீட்சைகளை நடத்தும் காலம் பிற்போனது.  

ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டங்களினால் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதம் நிலவியது. 

கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.  

உயர்தர பரீட்சை பாடத்திட்டம் நிறைவு செய்யாத காரணத்தால் உயர்தர பரீட்சையை பிற்போடுமாறு மாணவர்கள் வலியுறுத்துகிறார்கள். 

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்  பரீட்சையாக உயர்தர பரீட்சை கருதப்படுகிறது. 

ஆகவே மாணவர்களின் நியாயமான கோரிக்கையை கருத்திற்கொண்டு உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு  அரசாங்கம் பிற்போட வேண்டும் என்றார்.

ஒருமாத காலத்துக்கு பிற்போடப்படுமா உயர்தரப் பரீட்சை அரசிடம் முன்னாள் எம்.பி. கோரிக்கை  கல்வி பொதுதாராதர உயர்தர பாடத்திட்டம் நிறைவு பெறாத காரணத்தால் உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு பிற்போடுமாறு முன்னாள் பாராளுமன்ற உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.கொழும்பில் உள்ள சர்வஜன சக்தி கட்சியின் காரியாலயத்தில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கொவிட் பெருந்தொற்று மற்றும் பொருளாதார தாக்கம் ஆகிய காரணிகளால் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு தேசிய பரீட்சைகளை நடத்தும் காலம் பிற்போனது.  ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டங்களினால் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதம் நிலவியது. கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.  உயர்தர பரீட்சை பாடத்திட்டம் நிறைவு செய்யாத காரணத்தால் உயர்தர பரீட்சையை பிற்போடுமாறு மாணவர்கள் வலியுறுத்துகிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்  பரீட்சையாக உயர்தர பரீட்சை கருதப்படுகிறது. ஆகவே மாணவர்களின் நியாயமான கோரிக்கையை கருத்திற்கொண்டு உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு  அரசாங்கம் பிற்போட வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement