• May 19 2024

தேர்தல் நடக்குமா? நடக்காதா? சந்திரிக்காவின் சகா குமார வெல்கமவிற்கு வந்த சந்தேகம்!

Chithra / Jan 9th 2023, 6:47 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதற்கான சதி முயற்சிகளை மேற்கொண்டு மக்களுடன் விளையாட வேண்டாம் என புதிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் குமார வெல்கம எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு காலி முகத்திடல் அமைந்துள்ள பண்டாரநாயக்காவின்  உருவச் சிலைக்கு முன்பாக நேற்றையதினம் 124ஆவது ஜெனன தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குமார வெல்கம இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

எனக்கு பாரிய சந்தேகமுள்ளது, தேர்தல் நடக்குமா? எமது கட்சியுள்ள ஏனையவர்களை சிக்கலில் தள்ள பார்க்கின்றார்களா? தேர்தல் நடக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் மக்கள் உள்ளார்கள்,

நாட்டில் சில மாற்றங்கள் செய்ய கூடிய தேர்தலே இது. ஆனால் அதை தள்ளி போடலாம் என்ற கருத்தை நிதி அமைச்சர் கூறுகின்றார்.

பணம் அச்சிட்டு தேர்தல் நடத்த போவதில்லை, உலகில் அவ்வாறு இடம்பெற்றதில்லை எனக் கூறும் அனைத்து சந்தர்ப்பத்திலும் தேர்தலை பிற்போடுவதற்கான முயற்சி முன்னெடுக்கபடுவது போல எனக்கு தோன்றுகின்றது. மக்களுடன் விளையாட வேண்டாம் என அரசாங்கத்திற்கு கூறிகொள்கின்றேன்.


தேர்தல் நடக்குமா நடக்காதா சந்திரிக்காவின் சகா குமார வெல்கமவிற்கு வந்த சந்தேகம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதற்கான சதி முயற்சிகளை மேற்கொண்டு மக்களுடன் விளையாட வேண்டாம் என புதிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் குமார வெல்கம எச்சரிக்கை விடுத்துள்ளார்.கொழும்பு காலி முகத்திடல் அமைந்துள்ள பண்டாரநாயக்காவின்  உருவச் சிலைக்கு முன்பாக நேற்றையதினம் 124ஆவது ஜெனன தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குமார வெல்கம இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தார்.எனக்கு பாரிய சந்தேகமுள்ளது, தேர்தல் நடக்குமா எமது கட்சியுள்ள ஏனையவர்களை சிக்கலில் தள்ள பார்க்கின்றார்களா தேர்தல் நடக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் மக்கள் உள்ளார்கள்,நாட்டில் சில மாற்றங்கள் செய்ய கூடிய தேர்தலே இது. ஆனால் அதை தள்ளி போடலாம் என்ற கருத்தை நிதி அமைச்சர் கூறுகின்றார்.பணம் அச்சிட்டு தேர்தல் நடத்த போவதில்லை, உலகில் அவ்வாறு இடம்பெற்றதில்லை எனக் கூறும் அனைத்து சந்தர்ப்பத்திலும் தேர்தலை பிற்போடுவதற்கான முயற்சி முன்னெடுக்கபடுவது போல எனக்கு தோன்றுகின்றது. மக்களுடன் விளையாட வேண்டாம் என அரசாங்கத்திற்கு கூறிகொள்கின்றேன்.

Advertisement

Advertisement

Advertisement