• Oct 30 2024

மட்டக்களப்பில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு- பொலிஸார் தீவிர விசாரணை!

Tamil nila / Oct 20th 2024, 8:54 pm
image

Advertisement

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் எரியுண்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கூழாவடி பிரதான வீதியில் வீடு ஒன்றில்  57 வயதுடைய பெண்  ஒருவரே உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண்ணிற்கு எற்பட்டுள்ள சக்கரை வியாதி காரணமாக  ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சம்பவதினமான இன்று பிற்பகல் வீட்டின் முற்றத்தில் தனக்கு தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்ததையடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் வீட்டில் தனிமையில் இருந்துள்ள நிலையில்  இவ்வாறன  சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்த பொலிஸார்  குறித்த  பெண்ணின் மரணம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.


மட்டக்களப்பில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு- பொலிஸார் தீவிர விசாரணை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் எரியுண்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.கூழாவடி பிரதான வீதியில் வீடு ஒன்றில்  57 வயதுடைய பெண்  ஒருவரே உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.குறித்த பெண்ணிற்கு எற்பட்டுள்ள சக்கரை வியாதி காரணமாக  ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சம்பவதினமான இன்று பிற்பகல் வீட்டின் முற்றத்தில் தனக்கு தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்ததையடுத்து உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் வீட்டில் தனிமையில் இருந்துள்ள நிலையில்  இவ்வாறன  சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்த பொலிஸார்  குறித்த  பெண்ணின் மரணம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement