• May 18 2024

மணிப்பூரில் ஆடைகள் களையப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட பெண்கள்! நெஞ்சைப் பதறவைக்கும் வன்கொடுமை - மோடி வேதனை samugammedia

Chithra / Jul 20th 2023, 1:53 pm
image

Advertisement

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்களை கும்பலொன்று வீதியில் இழுத்துச் செல்லும் காட்சிகள் அடங்கிய காணொளியை பகிர வேண்டாம் என இந்திய மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. 

இரண்டு பழங்குடியின பெண்களை ஆடைகளை களைத்து, கும்பலொன்று வீதியில் இழுத்துச் செல்லும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14ஆம் திகதி இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 3ஆம் திகதி இம்பாலில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றிருந்தது. இந்த பேரணியின் போது மோதல் ஏற்பட்டிருந்த நிலையில் பின்னர் அது வன்முறையாக வெடித்தது.


வன்முறையின் தொடர்ச்சியாக, குறித்த பெண்கள் ஆடைகள் களையப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பதிவாகியிருக்கலாம் என கருதப்படுகிறது. 

இந்த நிலையில் சம்பத்தில் ஈடுபட்டவர்களை கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸார் இறங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறான சூழலிலேயே மணிப்பூர் சம்பவம் தொடர்பான குறித்த காணொளிகளை பகிர வேண்டாம் என டுவிட்டர் மற்றும் சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதால் இந்திய சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தும்படி காவல்துறையினருக்கு முதலமைச்சர் பிரேன் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி தன்னிடம் பேசியதாகவும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாகவும் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

ஸ்மிரிதி ராணி தனது டுவிட்டர் பக்கத்தில் ''குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த எந்தவொரு முயற்சியும் கைவிடப்படாது'' எனத் தெரிவித்துள்ளார்.

''மணிப்பூரில் இருந்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை படங்கள் நெஞ்சை பதற வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான இந்த கொடூரமான வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் அளவு குறைவு. சமூகத்தில் வன்முறையின் உச்சக்கட்டத்தை பெண்களும் குழந்தைகளும் சுமக்க வேண்டியுள்ளது'' என தனது ஆதங்கத்தை பிரியங்கா காந்தி வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை“எனது இதயம் வலியால் நிரம்பியுள்ளது. இந்தச் சம்பவம் எந்த ஒரு நாகரிக சமூகத்துக்கான அவமானம்” என்று மணிப்பூரில் பெண்களை வீதியில் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான சம்பவம் குறித்து பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.


பாராளுமன்ற கூட்டுத் தொடர் தொடங்கும் முன்பாக பேசிய பிரதமர் மோடி, 

"மணிப்பூரில் நடந்துள்ள சம்பவம் நாகரிக சமூகத்துக்கான அவமானம். இதற்காக நாடு வெட்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க கடுமையான சட்டங்களை இயற்றும்படி நான் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்தச் சம்பவம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மணிப்பூர் எங்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம், குற்றவாளிகள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தப்பக் கூடாது. நான் நாட்டுக்கு உறுதியளிக்கிறேன். சட்டம் அதன் முழு பலத்துடன் தனது கடமையைச் செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மணிப்பூரில் ஆடைகள் களையப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட பெண்கள் நெஞ்சைப் பதறவைக்கும் வன்கொடுமை - மோடி வேதனை samugammedia மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்களை கும்பலொன்று வீதியில் இழுத்துச் செல்லும் காட்சிகள் அடங்கிய காணொளியை பகிர வேண்டாம் என இந்திய மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு பழங்குடியின பெண்களை ஆடைகளை களைத்து, கும்பலொன்று வீதியில் இழுத்துச் செல்லும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14ஆம் திகதி இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த மே மாதம் 3ஆம் திகதி இம்பாலில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றிருந்தது. இந்த பேரணியின் போது மோதல் ஏற்பட்டிருந்த நிலையில் பின்னர் அது வன்முறையாக வெடித்தது.வன்முறையின் தொடர்ச்சியாக, குறித்த பெண்கள் ஆடைகள் களையப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பதிவாகியிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த நிலையில் சம்பத்தில் ஈடுபட்டவர்களை கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸார் இறங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இவ்வாறான சூழலிலேயே மணிப்பூர் சம்பவம் தொடர்பான குறித்த காணொளிகளை பகிர வேண்டாம் என டுவிட்டர் மற்றும் சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.மேலும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதால் இந்திய சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தும்படி காவல்துறையினருக்கு முதலமைச்சர் பிரேன் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி தன்னிடம் பேசியதாகவும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாகவும் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.ஸ்மிரிதி ராணி தனது டுவிட்டர் பக்கத்தில் ''குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த எந்தவொரு முயற்சியும் கைவிடப்படாது'' எனத் தெரிவித்துள்ளார்.''மணிப்பூரில் இருந்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை படங்கள் நெஞ்சை பதற வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான இந்த கொடூரமான வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் அளவு குறைவு. சமூகத்தில் வன்முறையின் உச்சக்கட்டத்தை பெண்களும் குழந்தைகளும் சுமக்க வேண்டியுள்ளது'' என தனது ஆதங்கத்தை பிரியங்கா காந்தி வெளிப்படுத்தியுள்ளார்.இதேவேளை“எனது இதயம் வலியால் நிரம்பியுள்ளது. இந்தச் சம்பவம் எந்த ஒரு நாகரிக சமூகத்துக்கான அவமானம்” என்று மணிப்பூரில் பெண்களை வீதியில் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான சம்பவம் குறித்து பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற கூட்டுத் தொடர் தொடங்கும் முன்பாக பேசிய பிரதமர் மோடி, "மணிப்பூரில் நடந்துள்ள சம்பவம் நாகரிக சமூகத்துக்கான அவமானம். இதற்காக நாடு வெட்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க கடுமையான சட்டங்களை இயற்றும்படி நான் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.இந்தச் சம்பவம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மணிப்பூர் எங்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம், குற்றவாளிகள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தப்பக் கூடாது. நான் நாட்டுக்கு உறுதியளிக்கிறேன். சட்டம் அதன் முழு பலத்துடன் தனது கடமையைச் செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement