ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில் சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி நேற்று முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
எவ்வாறெனில் பங்களாதேஷ் மகளிர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீச்சில் உதேஷிகா பிரபோதனி மற்றும் இனோஷி பிரியதர்ஷனி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
112 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் 17.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
மேலும் இலங்கை மகளிர் அணி சார்பில் விஷ்மி குணரத்ன 51 ஓட்டங்களையும், ஹர்ஷிதா மாதவவி ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி- முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை மகளிர் அணி ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில் சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி நேற்று முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.எவ்வாறெனில் பங்களாதேஷ் மகளிர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்களைப் பெற்றது.பந்துவீச்சில் உதேஷிகா பிரபோதனி மற்றும் இனோஷி பிரியதர்ஷனி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.112 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் 17.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.மேலும் இலங்கை மகளிர் அணி சார்பில் விஷ்மி குணரத்ன 51 ஓட்டங்களையும், ஹர்ஷிதா மாதவவி ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.