• Oct 27 2024

காஸாவின் வட பகுதியில் ஏற்பட்டுள்ள ஆபத்து – உலகச் சுதாதார நிறுவனம் எச்சரிக்கை!

Tamil nila / Oct 27th 2024, 7:29 am
image

Advertisement

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை தீவிரமடைந்திருப்பது காரணமாக காஸாவின் வட பகுதி பேரழிவு அபாயத்தில் உள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சுகாதார நிலையங்களின் நிலைமை மோசமாக இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

காஸாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரே மருத்துவமனை கமால் அட்வான் (Kamal Adwan). அங்கு நேற்று இஸ்ரேலின் தாக்குதலில் நால்வர் காயமடைந்தனர். அவர்களில் மூவர் சுகாதார ஊழியர்கள்.

உலகச் சுகாதார நிறுவனத்தின் 44 ஊழியர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

இஸ்ரேல் மருத்துவமனை முற்றுகையைத் தொடர்வதாகவும், ஆனால், ஊழியர்களுடன் தொடர்புகொள்ள முடிவதாகவும் உலகச் சுகாதார நிறுவனத் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) கூறினார்.

ஜபலியா அகதி முகாமில் உள்ள மருத்துவமனைக்குள் இஸ்ரேலியத் துருப்பினர் தாக்குதல் நடத்தியதாக காஸா சுகாதார அமைச்சு சாடியது


காஸாவின் வட பகுதியில் ஏற்பட்டுள்ள ஆபத்து – உலகச் சுதாதார நிறுவனம் எச்சரிக்கை இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை தீவிரமடைந்திருப்பது காரணமாக காஸாவின் வட பகுதி பேரழிவு அபாயத்தில் உள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.சுகாதார நிலையங்களின் நிலைமை மோசமாக இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.காஸாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரே மருத்துவமனை கமால் அட்வான் (Kamal Adwan). அங்கு நேற்று இஸ்ரேலின் தாக்குதலில் நால்வர் காயமடைந்தனர். அவர்களில் மூவர் சுகாதார ஊழியர்கள்.உலகச் சுகாதார நிறுவனத்தின் 44 ஊழியர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.இஸ்ரேல் மருத்துவமனை முற்றுகையைத் தொடர்வதாகவும், ஆனால், ஊழியர்களுடன் தொடர்புகொள்ள முடிவதாகவும் உலகச் சுகாதார நிறுவனத் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) கூறினார்.ஜபலியா அகதி முகாமில் உள்ள மருத்துவமனைக்குள் இஸ்ரேலியத் துருப்பினர் தாக்குதல் நடத்தியதாக காஸா சுகாதார அமைச்சு சாடியது

Advertisement

Advertisement

Advertisement