• Jul 27 2024

திருமலையில் மஞ்சல் நோய்த் தாக்கம்: நெல் விளைச்சலில் வீழ்ச்சி!

Sharmi / Jan 27th 2023, 4:08 pm
image

Advertisement

திருகோணமலை , தோப்பூர் - உல்லைக்குளம் வெளியில் 480 ஏக்கரில் செய்கைபண்ணப்பட்ட பெரும்போக வேளாண்மை அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இம்முறை மஞ்சல் நோய் தாக்கத்தினால் ஏக்கருக்கு 10-15  மூடைகள் அளவிலே விளைச்சல் கிடைத்துள்ளமையால் தாம் இலட்சக் கணக்கில் நஷ்டமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.முன்னரை விட தற்போது எண்ணெய்களின் விலை, பசளை பிரச்சினை, கூலி  என அனைத்துக்கும் அதிகளவில் செலவிட்டு வேளாண்மை செய்தும் விளைச்சல் குறைவடைந்து நஷ்டமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னர் ஏக்கருக்கு 20-30 மூடைகள் அளவில் விளைச்சல் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் கருத்து தெரிவிக்கும்போது -

மஞ்சல் நோய் தாக்கம் வந்தது. இதற்கு யாருமே உரிய தீர்வை எங்களுக்கு வழங்கவில்லை இன்று நாம் நஷ்டமடைந்து விவசாயிகள் கடனாளியாகியுள்ளோம்.இனி விற்பதற்கு எதுவும் இல்லை. கடந்தமுறை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 4000 ரூபாய் தருவதாக அரசாங்கத்தால் சொல்லப்பட்டது.ஆனால் இன்னும் அதுகூட தரப்படவில்லை. அரசியல்வாதிகள் கோடிக்கணக்கான விலை உயர்ந்த வாகனங்களில் பயணித்தும், சுகபோக உணவுகளை உண்டு மகிழ்கின்றீர்கள்.நாங்கள் நஷ்டமடைந்து கஷ்டப்படுகின்றோம்.எங்களது கண்ணீர் உங்களை சும்மா விடாது.

விவசாயிகளுக்கு டீசல் தருவோம் என்று அரசாங்கம் சொன்னது இன்னும் வழங்கப்படவில்லை.எங்களை ஏமாத்துகின்றீர்கள்.எந்த அரசாங்கம் வந்தாலும் இந்த நிலைதான்.
எமது மாவட்டத்தில் உள்ள மூன்று எம்.பிக்களும் எங்களது பிரச்சினை பற்றி பேசாமல் என்ன செய்கின்றீர்கள்.

விவசாயத்தை மேம்படுத்துவதாக இருந்தால் பசளை, டீசல் என்பவற்றை அரசாங்கம் மானியமாக வழங்க வேண்டும்.தற்போது அறுவடை செய்கின்றோம்.விவசாயிகளுக்கு மானியமாக டீசல் தருவோம் என்று  அரசாங்கம் சொன்னது இதுவரை வழங்கப்படவில்லை.இது என்ன அரசாங்கம்?  எனவும் தமது அதிர்ப்தியை வெளிப்படுத்தினர்.

அத்தோடு 69 கிலோ நிறையுடைய ஒரு மூடை நெல் 4000 தொடக்கம் 4500 ரூபாய் வலையில் கொள்வனவு செய்யப்படுவதாகவும் கவலை வெளியிட்டனர். 

இம்முறை பெரும்போகத்தில் விளைச்சல் குறைவடைந்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் உதவித்திட்டங்களை மேற்கொள்ள முன்வர வேண்டுமென தோப்பூர் - உல்லைக்குளம் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


திருமலையில் மஞ்சல் நோய்த் தாக்கம்: நெல் விளைச்சலில் வீழ்ச்சி திருகோணமலை , தோப்பூர் - உல்லைக்குளம் வெளியில் 480 ஏக்கரில் செய்கைபண்ணப்பட்ட பெரும்போக வேளாண்மை அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளது.இம்முறை மஞ்சல் நோய் தாக்கத்தினால் ஏக்கருக்கு 10-15  மூடைகள் அளவிலே விளைச்சல் கிடைத்துள்ளமையால் தாம் இலட்சக் கணக்கில் நஷ்டமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.முன்னரை விட தற்போது எண்ணெய்களின் விலை, பசளை பிரச்சினை, கூலி  என அனைத்துக்கும் அதிகளவில் செலவிட்டு வேளாண்மை செய்தும் விளைச்சல் குறைவடைந்து நஷ்டமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.இதற்கு முன்னர் ஏக்கருக்கு 20-30 மூடைகள் அளவில் விளைச்சல் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.விவசாயிகள் கருத்து தெரிவிக்கும்போது -மஞ்சல் நோய் தாக்கம் வந்தது. இதற்கு யாருமே உரிய தீர்வை எங்களுக்கு வழங்கவில்லை இன்று நாம் நஷ்டமடைந்து விவசாயிகள் கடனாளியாகியுள்ளோம்.இனி விற்பதற்கு எதுவும் இல்லை. கடந்தமுறை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 4000 ரூபாய் தருவதாக அரசாங்கத்தால் சொல்லப்பட்டது.ஆனால் இன்னும் அதுகூட தரப்படவில்லை. அரசியல்வாதிகள் கோடிக்கணக்கான விலை உயர்ந்த வாகனங்களில் பயணித்தும், சுகபோக உணவுகளை உண்டு மகிழ்கின்றீர்கள்.நாங்கள் நஷ்டமடைந்து கஷ்டப்படுகின்றோம்.எங்களது கண்ணீர் உங்களை சும்மா விடாது.விவசாயிகளுக்கு டீசல் தருவோம் என்று அரசாங்கம் சொன்னது இன்னும் வழங்கப்படவில்லை.எங்களை ஏமாத்துகின்றீர்கள்.எந்த அரசாங்கம் வந்தாலும் இந்த நிலைதான்.எமது மாவட்டத்தில் உள்ள மூன்று எம்.பிக்களும் எங்களது பிரச்சினை பற்றி பேசாமல் என்ன செய்கின்றீர்கள்.விவசாயத்தை மேம்படுத்துவதாக இருந்தால் பசளை, டீசல் என்பவற்றை அரசாங்கம் மானியமாக வழங்க வேண்டும்.தற்போது அறுவடை செய்கின்றோம்.விவசாயிகளுக்கு மானியமாக டீசல் தருவோம் என்று  அரசாங்கம் சொன்னது இதுவரை வழங்கப்படவில்லை.இது என்ன அரசாங்கம்  எனவும் தமது அதிர்ப்தியை வெளிப்படுத்தினர்.அத்தோடு 69 கிலோ நிறையுடைய ஒரு மூடை நெல் 4000 தொடக்கம் 4500 ரூபாய் வலையில் கொள்வனவு செய்யப்படுவதாகவும் கவலை வெளியிட்டனர். இம்முறை பெரும்போகத்தில் விளைச்சல் குறைவடைந்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் உதவித்திட்டங்களை மேற்கொள்ள முன்வர வேண்டுமென தோப்பூர் - உல்லைக்குளம் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement