• Nov 23 2024

நீங்களும் நானும் தான் இலங்கை தயாரிப்பு - பாராளுமன்றத்தில் கிண்டல் செய்த வியாழேந்திரன் எம்.பி...!samugammedia

Tharun / Dec 1st 2023, 7:00 pm
image

இந்நாடு பல்குத்தும் குச்சியை கூட வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்கிறது. நாங்கள் இறக்குமதி செய்து பழகிவிட்டோம். இதனால் தான் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோம். பொருட்கள் எல்லாம் ஏதோ ஒரு நாட்டில் இருந்து வருகிறது. நீங்களும் நானும் தான் இலங்கை தயாரிப்பு. ஆகவே இந்நிலைமை மாற்றி அமைக்கப்பட வேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். 

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் 

எமது நாடு பல்துறை சார்ந்த கூட்டுறவு இயக்கத்தை கொண்டுள்ளது. இருந்தாலும் அதன் செயற்பாடுகள் மந்த கதியில் தான்  இருக்கிறது. எனவே நாங்கள் இதனை வலுப்படுத்தி கொண்டு வருகிறோம். வேலை திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம்.

2015க்கு பிறகு ஆளும் தரப்பில் இருந்தவர்கள் இந்நாட்டை சிங்கப்பூராக மாற்றவில்லை. கடந்த 74 வருடங்களில் இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வந்த அரசாங்கங்கள் விட்ட பிழை தான் இந்நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் போனது. சகல இயற்கை வளங்களும் கொட்டி கிடக்கின்ற மிகசிறந்த நாட்டை அழிவு பாதைக்குள் இட்டு சென்றனர். ஆரம்பத்தில் கூடுதலான வருமானத்தை விவசாய உற்பத்தியில் பெற்றுக்கொண்ட நாடு தற்போது குறைவான வருமானத்தை விவசாய உற்பத்தியில் பெருகிறது. 

விவசாய நாடு என்று சொல்கிறோம். ஆனால் அரிசியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம். ஆகவே நாங்கள் உற்பத்தி பொருளாதாரத்தில் கவனம் செலுத்தவில்லை. 

ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்துடன் கொரோனா தொற்று காலங்களில் உணவு  உற்பத்தியில் தன்னிறைவு கொண்ட நாடுகளே தங்களை காத்து கொண்டன. மீண்டும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுமாயின் அதனை தாங்கி கொள்ளக்கூடிய கொள்திறன் எங்களிடம் இருக்கிறதா என்பதை நாங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்க வேண்டும். 

இந்நாடு பல்குத்தும் குச்சியை கூட வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்கிறது. நாங்கள் இறக்குமதி செய்து பழகிவிட்டோம். இதனால் தான் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோம். பொருட்கள் எல்லாம் ஏதோ ஒரு நாட்டில் இருந்து வருகிறது. நீங்களும் நானும் தான் இலங்கை தயாரிப்பு. ஆகவே இந்நிலைமை மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஆகவே உற்பத்திகளை உருவாக்க வேண்டும். சகல துறைகளிலும் உற்பத்தியை முன்னோக்கி செலுத்த வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


நீங்களும் நானும் தான் இலங்கை தயாரிப்பு - பாராளுமன்றத்தில் கிண்டல் செய்த வியாழேந்திரன் எம்.பி.samugammedia இந்நாடு பல்குத்தும் குச்சியை கூட வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்கிறது. நாங்கள் இறக்குமதி செய்து பழகிவிட்டோம். இதனால் தான் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோம். பொருட்கள் எல்லாம் ஏதோ ஒரு நாட்டில் இருந்து வருகிறது. நீங்களும் நானும் தான் இலங்கை தயாரிப்பு. ஆகவே இந்நிலைமை மாற்றி அமைக்கப்பட வேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எமது நாடு பல்துறை சார்ந்த கூட்டுறவு இயக்கத்தை கொண்டுள்ளது. இருந்தாலும் அதன் செயற்பாடுகள் மந்த கதியில் தான்  இருக்கிறது. எனவே நாங்கள் இதனை வலுப்படுத்தி கொண்டு வருகிறோம். வேலை திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம்.2015க்கு பிறகு ஆளும் தரப்பில் இருந்தவர்கள் இந்நாட்டை சிங்கப்பூராக மாற்றவில்லை. கடந்த 74 வருடங்களில் இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வந்த அரசாங்கங்கள் விட்ட பிழை தான் இந்நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் போனது. சகல இயற்கை வளங்களும் கொட்டி கிடக்கின்ற மிகசிறந்த நாட்டை அழிவு பாதைக்குள் இட்டு சென்றனர். ஆரம்பத்தில் கூடுதலான வருமானத்தை விவசாய உற்பத்தியில் பெற்றுக்கொண்ட நாடு தற்போது குறைவான வருமானத்தை விவசாய உற்பத்தியில் பெருகிறது. விவசாய நாடு என்று சொல்கிறோம். ஆனால் அரிசியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம். ஆகவே நாங்கள் உற்பத்தி பொருளாதாரத்தில் கவனம் செலுத்தவில்லை. ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்துடன் கொரோனா தொற்று காலங்களில் உணவு  உற்பத்தியில் தன்னிறைவு கொண்ட நாடுகளே தங்களை காத்து கொண்டன. மீண்டும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுமாயின் அதனை தாங்கி கொள்ளக்கூடிய கொள்திறன் எங்களிடம் இருக்கிறதா என்பதை நாங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்க வேண்டும். இந்நாடு பல்குத்தும் குச்சியை கூட வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்கிறது. நாங்கள் இறக்குமதி செய்து பழகிவிட்டோம். இதனால் தான் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோம். பொருட்கள் எல்லாம் ஏதோ ஒரு நாட்டில் இருந்து வருகிறது. நீங்களும் நானும் தான் இலங்கை தயாரிப்பு. ஆகவே இந்நிலைமை மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஆகவே உற்பத்திகளை உருவாக்க வேண்டும். சகல துறைகளிலும் உற்பத்தியை முன்னோக்கி செலுத்த வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement