• May 18 2024

நீங்கள் செய்யும் மக்கள் சேவையால் உங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது - டக்ளஸ் முன் கூறிய கிராம அலுவலர்! samugammedia

Tamil nila / Jun 25th 2023, 3:59 pm
image

Advertisement

பல தடவை உங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் வந்த போதும் நீங்கள் செய்யும் மக்கள் சேவை தான் உங்களை  காப்பாற்றியுள்ளதாக கிராம அலுவலர் ஒருவர் அமைச்சர் டக்ளஸ் முன்னிலையில் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற  மாவட்ட கிராம  அலுவலர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போதே இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டது.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் இக்கட்டான காலங்களில் பல சேவைகளை ஆற்றியுள்ளீர்கள் ஆதலால் தான் உயிர் அச்சுறுத்தல்கள் வந்த போதும் நீங்கள் காப்பாற்றப்பட்டுள்ளீர்கள்.

கிராம சபையாளர்கள் என்ற வகையிலே எங்களுக்கும் பல பிரச்சினைகள் உள்ளது அதனை நீங்கள் தீர்த்து வைக்க வேண்டும்.

அரசாங்கத்தில் இருந்து வரும் எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய அலுவலர்களாக கிராம சேவையாளர்கள் காணப்படும் நிலையில் எங்களுக்கான நிரந்தர கடமைப்பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.

ஒரு வருடத்தில் காகிதாகி செலவுக்காக 1500 ரூபாய் கொடுக்கப்படுகிறது குறித்த நிதியில் தான் தும்புத்தாடி தொடக்கம் விளக்குமாறு வரை வேண்டுகிற நிலையில் குறித்த நிதியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

எமது அலுவலகத்திற்காக தரப்படும் நிதி கூட தற்போதைய சூழ்நிலையில் போதாமை காரணமாக எமது சம்பளத்தில் இருந்தே கட்டட வாடகைப் பணத்தையும் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே அமைச்சரவை அந்தஸ்சு உள்ள அமைச்சர் என்ற வகையில் எமது நியாயமான கோரிக்கைகளை அரசாங்கத்துடன் பேசி தீர்வு பெற்றுத்தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.


நீங்கள் செய்யும் மக்கள் சேவையால் உங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது - டக்ளஸ் முன் கூறிய கிராம அலுவலர் samugammedia பல தடவை உங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் வந்த போதும் நீங்கள் செய்யும் மக்கள் சேவை தான் உங்களை  காப்பாற்றியுள்ளதாக கிராம அலுவலர் ஒருவர் அமைச்சர் டக்ளஸ் முன்னிலையில் தெரிவித்தார்.யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற  மாவட்ட கிராம  அலுவலர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போதே இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டது.அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் இக்கட்டான காலங்களில் பல சேவைகளை ஆற்றியுள்ளீர்கள் ஆதலால் தான் உயிர் அச்சுறுத்தல்கள் வந்த போதும் நீங்கள் காப்பாற்றப்பட்டுள்ளீர்கள்.கிராம சபையாளர்கள் என்ற வகையிலே எங்களுக்கும் பல பிரச்சினைகள் உள்ளது அதனை நீங்கள் தீர்த்து வைக்க வேண்டும்.அரசாங்கத்தில் இருந்து வரும் எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய அலுவலர்களாக கிராம சேவையாளர்கள் காணப்படும் நிலையில் எங்களுக்கான நிரந்தர கடமைப்பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.ஒரு வருடத்தில் காகிதாகி செலவுக்காக 1500 ரூபாய் கொடுக்கப்படுகிறது குறித்த நிதியில் தான் தும்புத்தாடி தொடக்கம் விளக்குமாறு வரை வேண்டுகிற நிலையில் குறித்த நிதியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்எமது அலுவலகத்திற்காக தரப்படும் நிதி கூட தற்போதைய சூழ்நிலையில் போதாமை காரணமாக எமது சம்பளத்தில் இருந்தே கட்டட வாடகைப் பணத்தையும் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஆகவே அமைச்சரவை அந்தஸ்சு உள்ள அமைச்சர் என்ற வகையில் எமது நியாயமான கோரிக்கைகளை அரசாங்கத்துடன் பேசி தீர்வு பெற்றுத்தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement