• Dec 19 2024

அமெரிக்க அதிபராக தெரிவான டிரம்பிற்கு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாழ்த்து

Tharmini / Dec 19th 2024, 10:12 am
image

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பிற்கு, விசுவநாதன் ருத்ரகுமாரன் நவம்பர் 26,  வழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.

அந்த கடிதத்தில், தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் , ஈழத் தமிழர்களாகிய நாங்கள், "பலத்தின் மூலம் அமைதி" என்ற உங்கள் தத்துவத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.

இத்தகைய பலம் இராணுவ வலுவில் இருந்து மட்டும் வருவதல்ல. அனைத்து மனிதகுலத்திற்கும் உலகளாவிய அடிப்படைக் கொள்கைகளான உண்மை, நீதி, சுதந்திரம் மற்றும் மக்களின் விருப்பம் ஆகியவற்றை உறுதியாகப் பற்றிக் கொண்டிருப்பதன் மூலமும் வருகிறது.

நாடுகளுக்கு மட்டுமல்ல, நாடற்ற இனங்களுக்கும் உரிமைகள் மற்றும் கடப்பாடுகள் இருக்கும் ஒரு புதிய உலக ஒழுங்கை உங்கள் தலைமைத்துவம் கொண்டு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நீதி மற்றும் தற்போது உலகெங்கும் நடந்து வரும் போர்கள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும், நீதியின் அடிப்படையிலும் உங்கள் தலைமைத்துவம் முடிவிற்கு கொண்டு வரும் எனவும் எதிர்பார்க்கிறோம்.

ருத்ரகுமாரன் இறுதியில், வன்முறைக்கு எதிரான உங்கள் துணிச்சலான எதிர்ப்பு, உண்மை, நீதி, சுதந்திரத்தை வேண்டி நிற்கும் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.உங்களது தேர்தல் வெற்றியானது எதிர்ப்பின் அடையாளமாகவும், ஊழல் நிறைந்த அதிகாரங்களுக்கு எதிரானதாகவும் உள்ளது.

உங்களது ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் எங்கள் வாழ்த்துக்கள். சுதந்திரமும், நீதியும் உள்ள சகாப்தத்தை நோக்கி உலகை வழிநடத்துங்கள்.


அமெரிக்க அதிபராக தெரிவான டிரம்பிற்கு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாழ்த்து அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பிற்கு, விசுவநாதன் ருத்ரகுமாரன் நவம்பர் 26,  வழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.அந்த கடிதத்தில், தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் , ஈழத் தமிழர்களாகிய நாங்கள், "பலத்தின் மூலம் அமைதி" என்ற உங்கள் தத்துவத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.இத்தகைய பலம் இராணுவ வலுவில் இருந்து மட்டும் வருவதல்ல. அனைத்து மனிதகுலத்திற்கும் உலகளாவிய அடிப்படைக் கொள்கைகளான உண்மை, நீதி, சுதந்திரம் மற்றும் மக்களின் விருப்பம் ஆகியவற்றை உறுதியாகப் பற்றிக் கொண்டிருப்பதன் மூலமும் வருகிறது.நாடுகளுக்கு மட்டுமல்ல, நாடற்ற இனங்களுக்கும் உரிமைகள் மற்றும் கடப்பாடுகள் இருக்கும் ஒரு புதிய உலக ஒழுங்கை உங்கள் தலைமைத்துவம் கொண்டு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நீதி மற்றும் தற்போது உலகெங்கும் நடந்து வரும் போர்கள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும், நீதியின் அடிப்படையிலும் உங்கள் தலைமைத்துவம் முடிவிற்கு கொண்டு வரும் எனவும் எதிர்பார்க்கிறோம்.ருத்ரகுமாரன் இறுதியில், வன்முறைக்கு எதிரான உங்கள் துணிச்சலான எதிர்ப்பு, உண்மை, நீதி, சுதந்திரத்தை வேண்டி நிற்கும் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.உங்களது தேர்தல் வெற்றியானது எதிர்ப்பின் அடையாளமாகவும், ஊழல் நிறைந்த அதிகாரங்களுக்கு எதிரானதாகவும் உள்ளது.உங்களது ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் எங்கள் வாழ்த்துக்கள். சுதந்திரமும், நீதியும் உள்ள சகாப்தத்தை நோக்கி உலகை வழிநடத்துங்கள்.

Advertisement

Advertisement

Advertisement