இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுத்திருந்த உத்தியோகபூர்வ அழைப்பையடுத்து இந்திய பிரதமர் இன்று மாலை இலங்கை வரவுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நாளை காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை இந்தியப் பிரதமரின் விஜயத்தின் நிகழ்ச்சி நிரலில் வடக்கு கிழக்கிற்கான பயணம் தொடர்பில் எந்தவிதமான திட்டங்களும் இதுவரை குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கும் இந்தியாவிற்குமான நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர் மட்ட குழுவினரும் இணைந்துள்ளனர்.
இந்நிலையிலேயே வடக்கு கிழக்கை இந்திய மத்திய அரசாங்கம் திட்டமிட்டு நிராகரிக்கின்றதா என்ற கேள்வி சமூகமட்டத்தில் எழுந்துள்ளது.
இதேவேளை இந்திய பிரதமர் அநுராதபுரம் மகா போதிக்குச் சென்று வழிபாடு மேற்கொள்ளவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இவ்வாறான நிலையில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் தற்போது பௌத்த மயமாக்கல் அதிகரித்து வரும் நிலையில், மோடியின் பௌத்த விகாரைக்கான விஜயம், பா.ஜ.க இலங்கையில் பௌத்த மயமாக்கலுக்கு துணை போகின்றதா என்ற ஐப்பாட்டையும் தோற்றுவித்துள்ளது.
இந்த ஐயப்பாட்டிற்கான பின்ணணியும் அவ்வாறே அமைந்துள்ளது. அதாவது, இலங்கையில் பௌத்த மயமாக்கலுக்கு இன்று வரை பா.ஜ.க முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றது.
அதாவது பௌத்தத்திற்கு என ஒரு தொகை பணம் இலங்கைக்கு ஒதுக்கப்படுகின்றது.
அதேவேளை இதற்கு முன்னரும் இலங்கைக்கு விஜயம் செய்த பா.ஜ.க உயர்மட்ட குழுவினரும் கூட பௌத்திற்கு என ஒதுக்கப்படும் பணத்தை தாம் தொடர்ந்தும் வழங்குவோம் எனத் தெரிவித்திருந்தமையும் சுட்டிக்கட்டத்தக்கது.
வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் தமிழரின் இன அடர்த்தி தற்போது குறைவதற்கு பௌத்த மயமாக்கலும் ஒரு காரணியாக அமைந்துள்ளது. எனவே மோடியின் பௌத்த விகாரைக்கான விஜயம் பௌத்த மயமாக்கலுக்கு பா.ஜ.க துணை போகின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
எனினும் மோடியின் இலங்கை விஜயத்திற்கான நிகழ்ச்சி நிரலில், திருகோணமலை சம்பூரில் இந்திய ஒத்துழைப்புடன் நிறுவப்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தி திட்டம், வெப்பநிலை மற்றும் ஈரப்பத்தை கட்டுப்படுத்தும் களஞசிய வளாகத்தின் நிர்மாணம், ஐயாயிரம் வணக்கஸ்தலங்களின் கூரைகளில் சூரிய மின்னுற்பத்தி தகடுகளை நிறுவும் திட்டம் என்பன மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால் தற்போது இந்தத் திட்டங்களை பிரதமர் மோடி நிகழ்நிலை ஊடாக திறந்து வைக்கவுள்ளார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறான நிலைப்பாடு, தற்போதைய அநுர தலைமையிலான அரசாங்கம் வடக்கு கிழக்கிற்கு இந்திய பிரதமர் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்பதில் மிகவும் கவனமாகவும் நுட்பமாகவும் செயற்படுகின்றதா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
இது இவ்வாறு இருக்கையில் இந்திய நாட்டைப் பொறுத்தமட்டில் பௌத்தம் இந்து சமயம் என்பது நட்புறவு மதங்களாகவே பார்க்கப்படுகின்றது.
ஆனால் இலங்கையில் பௌத்தம் இந்து மதம் என்பது மிக மோசமான பிரிவினையைாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையிலேயே வடக்கு கிழக்கை நிராகரித்து அநுராதபுர பௌத்த விகாரைக்கு மோடி விஜயம் மேற்கொள்வது பாரிய சர்ச்சைக்குள்ளாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உயர் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று இலங்கை வரும் இந்தியப் பிரதமர் மோடி. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுத்திருந்த உத்தியோகபூர்வ அழைப்பையடுத்து இந்திய பிரதமர் இன்று மாலை இலங்கை வரவுள்ளார்.இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நாளை காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.இதேவேளை இந்தியப் பிரதமரின் விஜயத்தின் நிகழ்ச்சி நிரலில் வடக்கு கிழக்கிற்கான பயணம் தொடர்பில் எந்தவிதமான திட்டங்களும் இதுவரை குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கைக்கும் இந்தியாவிற்குமான நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர் மட்ட குழுவினரும் இணைந்துள்ளனர்.இந்நிலையிலேயே வடக்கு கிழக்கை இந்திய மத்திய அரசாங்கம் திட்டமிட்டு நிராகரிக்கின்றதா என்ற கேள்வி சமூகமட்டத்தில் எழுந்துள்ளது.இதேவேளை இந்திய பிரதமர் அநுராதபுரம் மகா போதிக்குச் சென்று வழிபாடு மேற்கொள்ளவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.இவ்வாறான நிலையில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் தற்போது பௌத்த மயமாக்கல் அதிகரித்து வரும் நிலையில், மோடியின் பௌத்த விகாரைக்கான விஜயம், பா.ஜ.க இலங்கையில் பௌத்த மயமாக்கலுக்கு துணை போகின்றதா என்ற ஐப்பாட்டையும் தோற்றுவித்துள்ளது.இந்த ஐயப்பாட்டிற்கான பின்ணணியும் அவ்வாறே அமைந்துள்ளது. அதாவது, இலங்கையில் பௌத்த மயமாக்கலுக்கு இன்று வரை பா.ஜ.க முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றது. அதாவது பௌத்தத்திற்கு என ஒரு தொகை பணம் இலங்கைக்கு ஒதுக்கப்படுகின்றது.அதேவேளை இதற்கு முன்னரும் இலங்கைக்கு விஜயம் செய்த பா.ஜ.க உயர்மட்ட குழுவினரும் கூட பௌத்திற்கு என ஒதுக்கப்படும் பணத்தை தாம் தொடர்ந்தும் வழங்குவோம் எனத் தெரிவித்திருந்தமையும் சுட்டிக்கட்டத்தக்கது.வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் தமிழரின் இன அடர்த்தி தற்போது குறைவதற்கு பௌத்த மயமாக்கலும் ஒரு காரணியாக அமைந்துள்ளது. எனவே மோடியின் பௌத்த விகாரைக்கான விஜயம் பௌத்த மயமாக்கலுக்கு பா.ஜ.க துணை போகின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.எனினும் மோடியின் இலங்கை விஜயத்திற்கான நிகழ்ச்சி நிரலில், திருகோணமலை சம்பூரில் இந்திய ஒத்துழைப்புடன் நிறுவப்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தி திட்டம், வெப்பநிலை மற்றும் ஈரப்பத்தை கட்டுப்படுத்தும் களஞசிய வளாகத்தின் நிர்மாணம், ஐயாயிரம் வணக்கஸ்தலங்களின் கூரைகளில் சூரிய மின்னுற்பத்தி தகடுகளை நிறுவும் திட்டம் என்பன மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.ஆனால் தற்போது இந்தத் திட்டங்களை பிரதமர் மோடி நிகழ்நிலை ஊடாக திறந்து வைக்கவுள்ளார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.இவ்வாறான நிலைப்பாடு, தற்போதைய அநுர தலைமையிலான அரசாங்கம் வடக்கு கிழக்கிற்கு இந்திய பிரதமர் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்பதில் மிகவும் கவனமாகவும் நுட்பமாகவும் செயற்படுகின்றதா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.இது இவ்வாறு இருக்கையில் இந்திய நாட்டைப் பொறுத்தமட்டில் பௌத்தம் இந்து சமயம் என்பது நட்புறவு மதங்களாகவே பார்க்கப்படுகின்றது. ஆனால் இலங்கையில் பௌத்தம் இந்து மதம் என்பது மிக மோசமான பிரிவினையைாகப் பார்க்கப்படுகிறது.இந்நிலையிலேயே வடக்கு கிழக்கை நிராகரித்து அநுராதபுர பௌத்த விகாரைக்கு மோடி விஜயம் மேற்கொள்வது பாரிய சர்ச்சைக்குள்ளாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.