• Jan 26 2025

துருக்கி ஹோட்டல் தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு, 32 பேர் காயம்!

Tharmini / Jan 21st 2025, 4:33 pm
image

துருக்கியில் அமைந்துள்ள ஸ்கை ரிசார்ட் (ski resort) ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர்.

நாட்டின் வடமேற்கில் உள்ள கர்தல்காயாவில் அமைந்துள்ள ஹோட்டலின் உணவகத்தில் செவ்வாய்க்கிழமை (21) இரவு தீ விபத்து ஏற்பட்டதாக துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்தார்.

ஹோட்டல் அமைந்துள்ள போலு மாகாணத்தின் ஆளுநர், பாதிக்கப்பட்டவர்களில் இருவர் தீப்பரவலை அடுத்து பீதியில் கட்டிடத்திலிருந்து குதித்து இறந்ததாகக் அரசு நடத்தும் செய்தி நிறுவனமான அனடோலுவிடம் கூறினார்.

போலு ஆளுனரின் கருத்துப்படி, விபத்து நடந்த போது ஹோட்டலில் 234 விருந்தினர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஹோட்டலின் கூரை மற்றும் மேல் தளங்கள் தீப்பற்றி எரிவதை காட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. ஹோட்டலின் வெளிப்புறத்தில் உள்ள மரப் பலகைகள் தீ பரவுவதை துரிதப்படுத்தியிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எவ்வாறெனினும், தீ விபத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு 30 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 28 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்தது.

கர்தல்காயா என்பது இஸ்தான்புல்லுக்கு கிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோரோக்லு மலைகளில் உள்ள ஒரு பிரபலமான ஸ்கை ரிசார்ட் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துருக்கி ஹோட்டல் தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு, 32 பேர் காயம் துருக்கியில் அமைந்துள்ள ஸ்கை ரிசார்ட் (ski resort) ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர்.நாட்டின் வடமேற்கில் உள்ள கர்தல்காயாவில் அமைந்துள்ள ஹோட்டலின் உணவகத்தில் செவ்வாய்க்கிழமை (21) இரவு தீ விபத்து ஏற்பட்டதாக துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்தார்.ஹோட்டல் அமைந்துள்ள போலு மாகாணத்தின் ஆளுநர், பாதிக்கப்பட்டவர்களில் இருவர் தீப்பரவலை அடுத்து பீதியில் கட்டிடத்திலிருந்து குதித்து இறந்ததாகக் அரசு நடத்தும் செய்தி நிறுவனமான அனடோலுவிடம் கூறினார்.போலு ஆளுனரின் கருத்துப்படி, விபத்து நடந்த போது ஹோட்டலில் 234 விருந்தினர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.ஹோட்டலின் கூரை மற்றும் மேல் தளங்கள் தீப்பற்றி எரிவதை காட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. ஹோட்டலின் வெளிப்புறத்தில் உள்ள மரப் பலகைகள் தீ பரவுவதை துரிதப்படுத்தியிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.எவ்வாறெனினும், தீ விபத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு 30 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 28 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்தது.கர்தல்காயா என்பது இஸ்தான்புல்லுக்கு கிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோரோக்லு மலைகளில் உள்ள ஒரு பிரபலமான ஸ்கை ரிசார்ட் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement