• Nov 23 2024

இலங்கையில் விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் பேர்! கடுமையாக பாதிக்கப்படவுள்ள பொருளாதாரம்!

Chithra / Oct 6th 2024, 8:15 am
image

  

இலங்கையில் விவசாயத் துறையில் ஒரு வருடத்திற்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் தமது வேலைகளை விட்டுச் சென்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

இந்த நாட்டில் விவசாய துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளால் விவசாய வேலைகளை விட்டு மக்கள் வெளியேறுவதுடன்,

நாட்டிற்கு தேவையான விவசாய பொருட்களின் உற்பத்தியும் குறைவடைந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலை நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்படவுள்ள பொருளாதாரம்   இலங்கையில் விவசாயத் துறையில் ஒரு வருடத்திற்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் தமது வேலைகளை விட்டுச் சென்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.அறிக்கை ஒன்றை வௌியிட்டு மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டில் விவசாய துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளால் விவசாய வேலைகளை விட்டு மக்கள் வெளியேறுவதுடன்,நாட்டிற்கு தேவையான விவசாய பொருட்களின் உற்பத்தியும் குறைவடைந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.இந்நிலை நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement