• Mar 20 2025

மியன்மார் இணையக் குற்ற மையங்களிலிருந்து மீட்கப்பட்ட 14 இலங்கையர்கள்

Chithra / Mar 18th 2025, 7:41 am
image


மியான்மரின் மியாவாடியில் உள்ள சைபர் கிரைம் என்ற இணையக் குற்ற மையங்களிலிருந்து, மேலும் 14 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், 14 இலங்கையர்களும், 2025 மார்ச் 18 அன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், மியான்மர் அரசாங்கத்துடன் நடத்திய தொலைபேசி உரையாடல்கள் உட்பட இலங்கை மேற்கொண்ட தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளைத் தொடர்ந்து, இந்த 14 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். 

முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இலங்கையர்கள் பலர் இணையக் குற்ற மையங்களிலிருந்து மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மியன்மார் இணையக் குற்ற மையங்களிலிருந்து மீட்கப்பட்ட 14 இலங்கையர்கள் மியான்மரின் மியாவாடியில் உள்ள சைபர் கிரைம் என்ற இணையக் குற்ற மையங்களிலிருந்து, மேலும் 14 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 14 இலங்கையர்களும், 2025 மார்ச் 18 அன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், மியான்மர் அரசாங்கத்துடன் நடத்திய தொலைபேசி உரையாடல்கள் உட்பட இலங்கை மேற்கொண்ட தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளைத் தொடர்ந்து, இந்த 14 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இலங்கையர்கள் பலர் இணையக் குற்ற மையங்களிலிருந்து மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement