யாழ்ப்பாணத்தில் தீவிரவாத மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, மரக்கொட்டகைகளில் மர வேலை செய்பவர்களாக வேலை செய்து வந்த 15 இந்தியர்களை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை புலனாய்வாளர்கள் குழு கைது செய்து நாடு கடத்தியுள்ளது.
அவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தால் வழங்கப்பட்ட இலவச சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்கு நுழைந்திருந்ததாக கூறப்படுகிறது.
அவர்களில் இருவர் யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் நோய்களைக் குணப்படுத்த தீவிரவாத மத சேவையை நடத்தத் தயாராகி வந்ததாகவும், அதற்கு எதிராக இந்து தேசியவாத அமைப்புகளால் ஒரு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந் நிலையில், கைது செய்யப்பட்ட குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் கட்டுநாயக்கவில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு இண்டிகோ எயார்லைன்ஸ் விமானம் 6E-1172 மூலம் நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு மரக் கொட்டகையில் சிற்ப வேலை செய்து கொண்டிருந்த அந்த சந்தேகபர்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் 8 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டு, பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களில் பணிபுரிந்து வந்த மேலும் ஐந்து இந்தியப் பிரஜைகளும் பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு நாடு கடத்தப்பட்டடுள்ளனர்.
யாழில் தீவிரவாத மதப் பிரச்சாரம்: நாடு கடத்தப்பட்ட 15 இந்தியர்கள் யாழ்ப்பாணத்தில் தீவிரவாத மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, மரக்கொட்டகைகளில் மர வேலை செய்பவர்களாக வேலை செய்து வந்த 15 இந்தியர்களை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை புலனாய்வாளர்கள் குழு கைது செய்து நாடு கடத்தியுள்ளது.அவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தால் வழங்கப்பட்ட இலவச சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்கு நுழைந்திருந்ததாக கூறப்படுகிறது.அவர்களில் இருவர் யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் நோய்களைக் குணப்படுத்த தீவிரவாத மத சேவையை நடத்தத் தயாராகி வந்ததாகவும், அதற்கு எதிராக இந்து தேசியவாத அமைப்புகளால் ஒரு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.இந் நிலையில், கைது செய்யப்பட்ட குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் கட்டுநாயக்கவில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு இண்டிகோ எயார்லைன்ஸ் விமானம் 6E-1172 மூலம் நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்தோடு, யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு மரக் கொட்டகையில் சிற்ப வேலை செய்து கொண்டிருந்த அந்த சந்தேகபர்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் 8 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டு, பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இதேவேளை, யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களில் பணிபுரிந்து வந்த மேலும் ஐந்து இந்தியப் பிரஜைகளும் பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு நாடு கடத்தப்பட்டடுள்ளனர்.