• Mar 10 2025

தொண்டைமானாறு தேசிய வெளிக்கள பரீட்சைகளில் ஊழல்கள்; வெளிவந்த உண்மைகள்

Chithra / Mar 9th 2025, 1:44 pm
image

 

தொண்டைமானாறு தேசிய வெளிக்கள பரீட்சைகளில் நிறைய ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தேசிய வெளிக்கள பரீட்சைகள் நிலையம் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் எனவும்  தேசிய வெளிக்கள நிலையத்தின் நிகழ்சித் திட்ட முகாமையாளரும் நிறைவேற்று அதிகாரமுள்ள செயற்குழு உறுப்பினருமான பரா கஜேந்திரன் தெரிவித்தார். 

யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

தேசிய வெளிக்கள பரீட்சைகள் நிலையத்தில் இருந்து நடாத்த வேண்டிய தவணைப் பரீட்சைகள் கடந்த 2023 ஆண்டில் இருந்து இடம்பெறவில்லை. வடக்கு மாகாணம் முழுவதிலும் இந்த பாதிப்பை மாணவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

தேசிய வெளிக்கள பரீட்சைகள் நிலையத்திற்குச் சொந்தமான நிதி, யாப்புக்கு முறனாக சட்டமுறையற்று கையாளப்பட்டுள்ளது, இதில் பாரிய ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் ஆளுநருக்கும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கும் அறிக்கை மூலமாக தெரியப்படுத்தியுள்ளோம்.

தேசிய வெளிக்கள பரீட்சைகள் நிலையத்தை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

தொண்டைமானாறு தேசிய வெளிக்கள பரீட்சைகளில் ஊழல்கள்; வெளிவந்த உண்மைகள்  தொண்டைமானாறு தேசிய வெளிக்கள பரீட்சைகளில் நிறைய ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தேசிய வெளிக்கள பரீட்சைகள் நிலையம் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் எனவும்  தேசிய வெளிக்கள நிலையத்தின் நிகழ்சித் திட்ட முகாமையாளரும் நிறைவேற்று அதிகாரமுள்ள செயற்குழு உறுப்பினருமான பரா கஜேந்திரன் தெரிவித்தார். யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்தேசிய வெளிக்கள பரீட்சைகள் நிலையத்தில் இருந்து நடாத்த வேண்டிய தவணைப் பரீட்சைகள் கடந்த 2023 ஆண்டில் இருந்து இடம்பெறவில்லை. வடக்கு மாகாணம் முழுவதிலும் இந்த பாதிப்பை மாணவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.தேசிய வெளிக்கள பரீட்சைகள் நிலையத்திற்குச் சொந்தமான நிதி, யாப்புக்கு முறனாக சட்டமுறையற்று கையாளப்பட்டுள்ளது, இதில் பாரிய ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் ஆளுநருக்கும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கும் அறிக்கை மூலமாக தெரியப்படுத்தியுள்ளோம்.தேசிய வெளிக்கள பரீட்சைகள் நிலையத்தை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement