மத்திய நைஜீரியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 16 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(12) காலை இடம்பெற்றுள்ளது.
பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததையடுத்து, இடிபாடுகளில் சிக்கிய மாணவர்கள் உதவிக்காக அபாயக் குரல் எழுப்பியதுடன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில், நைஜீரியாவின் தேசிய அவசரகால முகாமைத்துவ நிலையம் வெளியிட்ட அறிவிப்பில், இச் சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், பல மாணவர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி, குறைந்தது 16 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இப்பாடசாலையில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 16 மாணவர்கள் பரிதாப மரணம். மத்திய நைஜீரியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 16 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த சம்பவம் நேற்றையதினம்(12) காலை இடம்பெற்றுள்ளது.பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததையடுத்து, இடிபாடுகளில் சிக்கிய மாணவர்கள் உதவிக்காக அபாயக் குரல் எழுப்பியதுடன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில், நைஜீரியாவின் தேசிய அவசரகால முகாமைத்துவ நிலையம் வெளியிட்ட அறிவிப்பில், இச் சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், பல மாணவர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி, குறைந்தது 16 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.இப்பாடசாலையில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.