• Nov 17 2024

மொட்டுவில் இருந்து மேலும் 17 பேர் ரணிலுக்கு அதரவு..!

Chithra / Aug 20th 2024, 1:42 pm
image

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 17 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்து, அவருடன் இணைந்து கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசத்துடனான சந்திப்பின் பின்னர் அவர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக தம்மை அர்ப்பணிப்பதாக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றது.

அநுராதபுரம் மாவட்ட அமைப்பாளர்களாக இஷாக் ரஹ்மான் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பீ. ஹெரிசன், டபிள்யூ. பி. ஏகநாயக்க கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.

அத்துடன், முன்னர் ஜாதிக ஹெல உறுமயவை பிரதிநிதித்துவப்படுத்திய நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்கவுக்கு ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம காலி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டதுடன் கட்சியின் சிரேஷ்டர்களின் பங்களிப்புடன் 295 பேருக்கு மாவட்ட மற்றும் பிராந்திய அமைப்பாளர் பதவிகள் வழங்கப்பட்டன.

 

மொட்டுவில் இருந்து மேலும் 17 பேர் ரணிலுக்கு அதரவு.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 17 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்து, அவருடன் இணைந்து கொண்டுள்ளனர்.ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசத்துடனான சந்திப்பின் பின்னர் அவர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.இதன்போது, ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக தம்மை அர்ப்பணிப்பதாக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றது.அநுராதபுரம் மாவட்ட அமைப்பாளர்களாக இஷாக் ரஹ்மான் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பீ. ஹெரிசன், டபிள்யூ. பி. ஏகநாயக்க கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.அத்துடன், முன்னர் ஜாதிக ஹெல உறுமயவை பிரதிநிதித்துவப்படுத்திய நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்கவுக்கு ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.மேலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம காலி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டதுடன் கட்சியின் சிரேஷ்டர்களின் பங்களிப்புடன் 295 பேருக்கு மாவட்ட மற்றும் பிராந்திய அமைப்பாளர் பதவிகள் வழங்கப்பட்டன. 

Advertisement

Advertisement

Advertisement