சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது.
போட்டியின் இன்றைய ஆட்ட நேர முடிவின் போது, தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 47 ஓட்டங்களை பெற்றுள்ளது.
முன்னதாக தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து, 418 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில், அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 164 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 108 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
தமது முதலாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களை பெற்றதுடன், இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 280 ஓட்டங்களை பெற்றது.
மேலும் பங்களாதேஷ் அணியினர் இன்னும் வெற்றி பெற வேண்டுமாயின் மேலும் 464 ஓட்டங்களை பெறவேண்டும்.
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி- வலுவான நிலையில் இலங்கை அணி. சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது.போட்டியின் இன்றைய ஆட்ட நேர முடிவின் போது, தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 47 ஓட்டங்களை பெற்றுள்ளது.முன்னதாக தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து, 418 ஓட்டங்களை பெற்றது.இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில், அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 164 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 108 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.தமது முதலாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களை பெற்றதுடன், இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 280 ஓட்டங்களை பெற்றது.மேலும் பங்களாதேஷ் அணியினர் இன்னும் வெற்றி பெற வேண்டுமாயின் மேலும் 464 ஓட்டங்களை பெறவேண்டும்.