21.11.2021 இன்றைய ராசிபலன்

217

மேஷராசி அன்பர்களே
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்து கொள்ளாதீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபராசி அன்பர்களே
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாக வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் அலைக்கழிக்கப்படுவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மிதுனராசி அன்பர்களே
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குகூடும். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். வெற்றி பெறும் நாள்.

கடகராசி அன்பர்களே
உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

சிம்மராசி அன்பர்களே
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு , களை கட்டும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.

கன்னிராசி அன்பர்களே
சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நெருங்கியவர் சிலர் உங்களை உதாசீனப்படுத்திப் பேசுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

துலாராசி அன்பர்களே
தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

விருச்சிகராசி அன்பர்களே
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் ஆதாயம் உண்டு.வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய சொந்தம் தேடி வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

தனுராசி அன்பர்களே
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். கனவு நனவாகும் நாள்.

மகரராசி அன்பர்களே
திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பராசி அன்பர்களே
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

மீனராசி அன்பர்களே
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திவரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சித் தங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.