• Jan 09 2026

சிகரெட் பயன்பாட்டினால் இலங்கையில் வருடாந்தம் 22,000 உயிரிழப்புகள்!

Chithra / Jan 8th 2026, 8:44 am
image

 

புகையிலை மற்றும் சிகரெட் பாவனை காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 22 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. 


நாட்டில் ஏற்படும் அனைத்து இறப்புகளில் 83 சதவீதமானவை தொற்று அல்லாத நோய்களால் ஏற்படுகின்றது.


இந்த இறப்புகளில் செல்வாக்கு செலுத்தும் நான்கு பிரதான காரணிகளில் புகையிலை பயன்பாடும் ஒன்றாகும் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் சுட்டிக்காட்டியுள்ளது.


இலங்கையில் சுமார் 1.5 மில்லின் பெரியவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். 


அதேநேரம், உலகளவில் ஒவ்வொரு ஆறு வினாடிக்கும் புகையிலை பயன்பாடு காரணமாக ஒரு இறப்பு பதிவாவதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க குறிப்பிட்டார்.

சிகரெட் பயன்பாட்டினால் இலங்கையில் வருடாந்தம் 22,000 உயிரிழப்புகள்  புகையிலை மற்றும் சிகரெட் பாவனை காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 22 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்படும் அனைத்து இறப்புகளில் 83 சதவீதமானவை தொற்று அல்லாத நோய்களால் ஏற்படுகின்றது.இந்த இறப்புகளில் செல்வாக்கு செலுத்தும் நான்கு பிரதான காரணிகளில் புகையிலை பயன்பாடும் ஒன்றாகும் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் சுட்டிக்காட்டியுள்ளது.இலங்கையில் சுமார் 1.5 மில்லின் பெரியவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். அதேநேரம், உலகளவில் ஒவ்வொரு ஆறு வினாடிக்கும் புகையிலை பயன்பாடு காரணமாக ஒரு இறப்பு பதிவாவதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement