தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வை வழங்குவதில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு உறுதியுடன் செயற்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
தமிழ் மக்களை இந்த அரசு ஒருபோதும் ஏமாற்றாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"கடந்த காலங்களில் பல அரசுகள் தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகள் வழங்கிய போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்தத் தவறுகளை மீண்டும் செய்யாமல், உண்மையான மற்றும் நீடித்த அரசியல் தீர்வை வழங்குவதற்காக தற்போதைய அரசு பொறுப்புடன் செயற்படும்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், சமத்துவம், பாதுகாப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற அடிப்படை விடயங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும்.
அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய ஒற்றுமையான நாட்டை கட்டியெழுப்புவதே இந்த அரசின் நோக்கமகனும்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது நாட்டின் உள்நாட்டு விடயமாக இருந்தாலும், சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசு வெளிப்படையாகவும் பொறுப்புடனும் செயற்படுவதாக நம்பிக்கை அளிக்க வேண்டிய தேவையும் உள்ளது.
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களது நம்பிக்கையை மீட்டெடுப்பதே இந்த அரசின் முதன்மையான இலக்கு. அதற்காக அரசியல் ரீதியான நிரந்தர தீர்வு வழங்கப்படும் என்று உறுதியளிக்கின்றோம். வாக்குறுதி மட்டும் அல்ல, அதை நடைமுறையில் நிறைவேற்றும் அரசாக இந்த அரசு செயற்படும்." - என்றார்.
தமிழர்களை அநுர அரசு ஏமாற்றாது - நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்படும் விஜித ஹேரத் உறுதி தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வை வழங்குவதில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு உறுதியுடன் செயற்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். தமிழ் மக்களை இந்த அரசு ஒருபோதும் ஏமாற்றாது என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"கடந்த காலங்களில் பல அரசுகள் தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகள் வழங்கிய போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்தத் தவறுகளை மீண்டும் செய்யாமல், உண்மையான மற்றும் நீடித்த அரசியல் தீர்வை வழங்குவதற்காக தற்போதைய அரசு பொறுப்புடன் செயற்படும்.தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், சமத்துவம், பாதுகாப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற அடிப்படை விடயங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும்.அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய ஒற்றுமையான நாட்டை கட்டியெழுப்புவதே இந்த அரசின் நோக்கமகனும்.இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது நாட்டின் உள்நாட்டு விடயமாக இருந்தாலும், சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசு வெளிப்படையாகவும் பொறுப்புடனும் செயற்படுவதாக நம்பிக்கை அளிக்க வேண்டிய தேவையும் உள்ளது.தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களது நம்பிக்கையை மீட்டெடுப்பதே இந்த அரசின் முதன்மையான இலக்கு. அதற்காக அரசியல் ரீதியான நிரந்தர தீர்வு வழங்கப்படும் என்று உறுதியளிக்கின்றோம். வாக்குறுதி மட்டும் அல்ல, அதை நடைமுறையில் நிறைவேற்றும் அரசாக இந்த அரசு செயற்படும்." - என்றார்.