• Jul 04 2024

இலங்கையில் சீரற்ற காலநிலையால் வீடுகளை இழந்த 300 பேர் - 7 பேர் வைத்தியசாலையில்! SamugamMedia

Chithra / Mar 20th 2023, 8:23 am
image

Advertisement

பண்டாரவளை, பூனாகலை மகல்தெனிய பிரதேசத்தில் நேற்று இரவு 8 மணியளவில் பெய்த கடும் மழையினால், மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பெரும் வெள்ளத்தில் பல தோட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.

அனர்த்த நிலைமை காரணமாக மூன்று வர்த்தக வீடுகள் மற்றும் தோட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்து கொஸ்லந்த மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடும் மழை காரணமாக அந்த பகுதியின் வீடுகளில் இருந்த சுமார் 300 பேர் புனகலை தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொஸ்லந்த, லியங்கஹவெல மற்றும் பண்டாரவளை பொலிஸ் தலைமையகமும் தியத்தலாவ இராணுவ அதிகாரிகளும் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளனர்.


இலங்கையில் சீரற்ற காலநிலையால் வீடுகளை இழந்த 300 பேர் - 7 பேர் வைத்தியசாலையில் SamugamMedia பண்டாரவளை, பூனாகலை மகல்தெனிய பிரதேசத்தில் நேற்று இரவு 8 மணியளவில் பெய்த கடும் மழையினால், மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும் வெள்ளத்தில் பல தோட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.அனர்த்த நிலைமை காரணமாக மூன்று வர்த்தக வீடுகள் மற்றும் தோட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்து கொஸ்லந்த மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.கடும் மழை காரணமாக அந்த பகுதியின் வீடுகளில் இருந்த சுமார் 300 பேர் புனகலை தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொஸ்லந்த, லியங்கஹவெல மற்றும் பண்டாரவளை பொலிஸ் தலைமையகமும் தியத்தலாவ இராணுவ அதிகாரிகளும் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement