• May 18 2024

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி! SamugamMedia

Chithra / Mar 20th 2023, 8:14 am
image

Advertisement

பொத்துஹெர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேவத்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (19) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 35 வயதுடைய கஹவத்த, பனாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 05 நாட்களுக்கு முன்னர் மொரகொல்ல வத்தை என்ற காணியில் கூலி வேலை செய்து வந்த மரணமானவர், கந்தேவத்த என்ற பக்கத்து காணியின் காட்டுப் பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் விழுந்து கிடந்துள்ளார்.


இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவரின் அருகில் சுட்டுக் கொல்லப்பட்ட முள்ளம்பன்றி ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், மின்விளக்கு மற்றும் கைத்தொலைபேசி என்பனவும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சடலம் தொடர்பில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் இடம்பெற்ற விதம் தொடர்பில் பொத்துஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி SamugamMedia பொத்துஹெர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேவத்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (19) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் 35 வயதுடைய கஹவத்த, பனாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.கடந்த 05 நாட்களுக்கு முன்னர் மொரகொல்ல வத்தை என்ற காணியில் கூலி வேலை செய்து வந்த மரணமானவர், கந்தேவத்த என்ற பக்கத்து காணியின் காட்டுப் பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் விழுந்து கிடந்துள்ளார்.இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவரின் அருகில் சுட்டுக் கொல்லப்பட்ட முள்ளம்பன்றி ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், மின்விளக்கு மற்றும் கைத்தொலைபேசி என்பனவும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சடலம் தொடர்பில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த மரணம் இடம்பெற்ற விதம் தொடர்பில் பொத்துஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement