• Nov 28 2024

குளவிக் கொட்டுத் தாக்குதலுக்கு இலக்கான 35 பாடசாலை மாணவர்கள்! தமிழர் பகுதியில் பரபரப்பு

Chithra / Jun 13th 2024, 1:08 pm
image


கிளிநொச்சி - தருமபுரம் மத்திய கல்லூரியில் குளவிக் கொட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலைக் கற்றல் நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள நாவல் மரம் ஒன்றில் இருந்த பாரிய அளவிலான குளவிக் கூடு  ஒன்று, அதிக காற்று வீசி வரும் நிலையில் கலைந்துள்ளது.

இந்நிலையில் 35 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தர்மபுரம்  வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன், தற்பொழுது 18 மாணவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நான்கு ஆசிரியர்களும் குளவி கொட்டுக்கு இலக்காகியதுடன், மூன்று ஆசிரியர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பாக அனத்த முகாமத்துவ பிரிவினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர், பொலிசாருக்கும் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக, உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த குழுவினர், 

இன்றைய தினம் மாலை அப்பகுதியில் இருக்கும் குளவிக் கூட்டினை எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அகற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அனைத்து மாணவர்களும் உடனடியாக பாடசாலை வளாகத்தில் இருந்து பாதுகாப்பாக  வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குளவிக் கொட்டுத் தாக்குதலுக்கு இலக்கான 35 பாடசாலை மாணவர்கள் தமிழர் பகுதியில் பரபரப்பு கிளிநொச்சி - தருமபுரம் மத்திய கல்லூரியில் குளவிக் கொட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாடசாலைக் கற்றல் நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள நாவல் மரம் ஒன்றில் இருந்த பாரிய அளவிலான குளவிக் கூடு  ஒன்று, அதிக காற்று வீசி வரும் நிலையில் கலைந்துள்ளது.இந்நிலையில் 35 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தர்மபுரம்  வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன், தற்பொழுது 18 மாணவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நான்கு ஆசிரியர்களும் குளவி கொட்டுக்கு இலக்காகியதுடன், மூன்று ஆசிரியர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.இச்சம்பவம் தொடர்பாக அனத்த முகாமத்துவ பிரிவினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர், பொலிசாருக்கும் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக, உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த குழுவினர், இன்றைய தினம் மாலை அப்பகுதியில் இருக்கும் குளவிக் கூட்டினை எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அகற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அனைத்து மாணவர்களும் உடனடியாக பாடசாலை வளாகத்தில் இருந்து பாதுகாப்பாக  வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement