• Jun 18 2024

430 அரச நிறுவனங்களுக்கு ஏற்படவுள்ள நிலை..! அரசு வெளியிட்டுள்ள தகவல் samugammedia

Chithra / May 14th 2023, 3:47 pm
image

Advertisement

இலங்கையின் சுமார் 430 அரச நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட அல்லது மறுசீரமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த செயல்முறைகள் இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பித்து ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் நிதி அமைச்சு, இந்த 430 அரச நிறுவனங்களை நட்டம் மற்றும் இலாபம் ஈட்டும் உத்தேச மறுசீரமைப்பு செயல்முறைக்காக அடையாளம் கண்டுள்ளது.

முன்மொழியப்பட்ட திட்டத்தின் கீழ், சில நிறுவனங்கள் விற்கப்படும் சில நிறுவனங்கள் மூடப்படும் அல்லது இணைக்கப்படும் அல்லது மறுகட்டமைக்கப்படும்.

430 நிறுவனங்களில் 39 கூட்டுத்தாபனங்கள், 218 கம்பனிகள் மற்றும் 173 சட்டப்பூர்வ சபைகள் உள்ளன.

இவ்நிறுவனங்களில் 21 பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களும் அடங்குகின்றன.

மதிப்பீடுகளின்படி, கடந்த ஆண்டு, சிலோன் பெட்ரோலியம் கோர்ப்பரேஷன் 615 பில்லியன் ரூபாய்களையும், இலங்கை மின்சார சபை 272 பில்லியன் ரூபாய்களையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 70 பில்லியன் ரூபாய்.

மற்றும் சிலோன் ஷிப்பிங் கோர்ப்பரேஷன் லிமிடெட் 4 பில்லியன் ரூபாய்களையும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால சபை 3 பில்லியன் ரூபாய்களையும், தேசிய வீடமைப்பு மேம்பாட்டு ஆணைக்குழு 1 பில்லியன் ரூபாய்களையும் நட்டமாக பதிவுசெய்துள்ளன.

இதனை தவிர அரச பொறியியல் கூட்டுத்தாபனம், ஹோட்டல் டெவலப்பர்ஸ் லங்கா பிஎல்சி, லங்கா சதோச லிமிடெட், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், மைக்ரோ லிமிடெட், அரச அச்சகக் கூட்டுத்தாபனம்.

மற்றும் ஐடிஎன், தேயிலை சிறு தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தேசிய கால்நடை அபிவிருத்தி அதிகார சபை மற்றும் லங்கா லேலண்ட் லிமிடெட் என்பனவும் நட்டமடைந்துள்ளன.

இந்தநிலையில் குறித்த நிறுவனங்களின் மறுசீரமைப்பு செயல்முறையை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சகத்தில் பொது தனியார் கூட்டாண்மைக்கான தேசிய நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது.

430 அரச நிறுவனங்களுக்கு ஏற்படவுள்ள நிலை. அரசு வெளியிட்டுள்ள தகவல் samugammedia இலங்கையின் சுமார் 430 அரச நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட அல்லது மறுசீரமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த செயல்முறைகள் இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பித்து ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கையின் நிதி அமைச்சு, இந்த 430 அரச நிறுவனங்களை நட்டம் மற்றும் இலாபம் ஈட்டும் உத்தேச மறுசீரமைப்பு செயல்முறைக்காக அடையாளம் கண்டுள்ளது.முன்மொழியப்பட்ட திட்டத்தின் கீழ், சில நிறுவனங்கள் விற்கப்படும் சில நிறுவனங்கள் மூடப்படும் அல்லது இணைக்கப்படும் அல்லது மறுகட்டமைக்கப்படும்.430 நிறுவனங்களில் 39 கூட்டுத்தாபனங்கள், 218 கம்பனிகள் மற்றும் 173 சட்டப்பூர்வ சபைகள் உள்ளன.இவ்நிறுவனங்களில் 21 பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களும் அடங்குகின்றன.மதிப்பீடுகளின்படி, கடந்த ஆண்டு, சிலோன் பெட்ரோலியம் கோர்ப்பரேஷன் 615 பில்லியன் ரூபாய்களையும், இலங்கை மின்சார சபை 272 பில்லியன் ரூபாய்களையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 70 பில்லியன் ரூபாய்.மற்றும் சிலோன் ஷிப்பிங் கோர்ப்பரேஷன் லிமிடெட் 4 பில்லியன் ரூபாய்களையும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால சபை 3 பில்லியன் ரூபாய்களையும், தேசிய வீடமைப்பு மேம்பாட்டு ஆணைக்குழு 1 பில்லியன் ரூபாய்களையும் நட்டமாக பதிவுசெய்துள்ளன.இதனை தவிர அரச பொறியியல் கூட்டுத்தாபனம், ஹோட்டல் டெவலப்பர்ஸ் லங்கா பிஎல்சி, லங்கா சதோச லிமிடெட், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், மைக்ரோ லிமிடெட், அரச அச்சகக் கூட்டுத்தாபனம்.மற்றும் ஐடிஎன், தேயிலை சிறு தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தேசிய கால்நடை அபிவிருத்தி அதிகார சபை மற்றும் லங்கா லேலண்ட் லிமிடெட் என்பனவும் நட்டமடைந்துள்ளன.இந்தநிலையில் குறித்த நிறுவனங்களின் மறுசீரமைப்பு செயல்முறையை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சகத்தில் பொது தனியார் கூட்டாண்மைக்கான தேசிய நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement