நக்கிள்ஸ் மலைத்தொடரில் அனுமதியின்றி முகாமிட்டு கூடாரம் அமைத்த குற்றச்சாட்டில் 05 யுவதிகளும் 17 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹுன்னஸ்கிரிய வன அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பண்டாரவளை, கொழும்பு, பதுளை, கண்டி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும், அவர்கள் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் குழுவைச் சேர்ந்த பலரின் ஒருங்கிணைப்பின் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் பேஸ்புக் சமூக ஊடகங்கள் ஊடாக இணைந்துள்ளனர்.
இந்த குழுவினர் நக்கிள்ஸ் வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்து கூடாரம் அமைத்து நெருப்பு கொளுத்தி விருந்தில் ஈடுபட்டதாக வனத்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள், பாதுகாப்பு துறையுடன் தொடர்புடையவர் என கூறப்படும் நபர் மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களும் உள்ளதாக தெரியவந்துள்ளது.
பேஸ்புக் மூலம் இணைந்து காட்டிற்குள் முகாமிட்டு விருந்து - வசமாக சிக்கிய 5 யுவதிகள் மற்றும் 17 இளைஞர்கள் நக்கிள்ஸ் மலைத்தொடரில் அனுமதியின்றி முகாமிட்டு கூடாரம் அமைத்த குற்றச்சாட்டில் 05 யுவதிகளும் 17 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹுன்னஸ்கிரிய வன அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பண்டாரவளை, கொழும்பு, பதுளை, கண்டி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும், அவர்கள் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தக் குழுவைச் சேர்ந்த பலரின் ஒருங்கிணைப்பின் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் பேஸ்புக் சமூக ஊடகங்கள் ஊடாக இணைந்துள்ளனர். இந்த குழுவினர் நக்கிள்ஸ் வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்து கூடாரம் அமைத்து நெருப்பு கொளுத்தி விருந்தில் ஈடுபட்டதாக வனத்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள், பாதுகாப்பு துறையுடன் தொடர்புடையவர் என கூறப்படும் நபர் மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களும் உள்ளதாக தெரியவந்துள்ளது.